மோவ்....!
மோவ்…!
எங்க அம்மா.. அவங்கள பத்தி தான் இந்த கதையில நான் எழுதப்போறேன்.நிறைய பேர் அம்மாவ பத்தி எழுதியிருக்கலாம்.ஆனா இந்த கதை ஒரு உண்மைக் கதை,இப்பவும் நடந்துட்டு இருக்க கதை.சரி நாம கதைக்குள்ள போகலாம். எங்க அம்மா பேரு சுலேச்சனா.ஒரு சின்ன கிராமத்துல,ஏழைக்குடும்பத்துல தான் பொறந்தாங்க.இவங்களுக்கு ரெண்டு தங்கச்சி,ஒரு தம்பி.அம்மா,அப்பா எல்லாம் கூலி வேல தான்.எங்க அம்மா பெருசா ஒன்னும் படிக்கல,அஞ்சாம் வகுப்பு தான் படிச்சி இருக்காங்க.அவங்க குடும்பத்துல யாருமே,பத்தாம் வகுப்புக்கு மேல தாண்டல.காரணம்,குடும்ப சூழ்நிலை அப்படி.சின்னவயசுல இருந்து அம்மா,அப்பா கூட சேந்து ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. எல்லாரும் கஷ்டப்பட்டு தான் இருப்பாங்க.ஆனா, எங்க அம்மா கொஞ்சம் அதிகமாவே கஷ்டப்பட்டாங்க.சாதி ரீதியாவும் நிறைய இடத்துல,இவங்களயும் இவங்க குடும்பத்தையும்,மட்டம் தட்டி,ஊருல யாரும் மதிக்காம அப்படியே இவங்க வாழ்க்கை போய்டு இருந்துச்சி.மூனா வேள சோறுன்றது,இரண்டு வேள,ஒரு வேள கூட ஆச்சு.அந்த அளவுக்கு சின்ன வயசுலயே கஷ்டப்பட்டாங்க.
அதுக்கு அப்புறம் கல்யாணம் ஆச்சு.அந்த காலத்துல எல்லாம் பொன்னுங்கவயசுக்கு வந்துட்டா,பெத்தவங்களுக்கு பயம் வந்து,கல்யாணத்த பண்ணி வச்சிடுவாங்க.அந்த மாதிரி தான் இவங்களுக்கும் சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.கல்யாணமாகி ஒரு கொழந்த பொறந்துச்சி.அந்த கொழந்த தான் நானு..அதா கொழந்த பொறந்துடுச்சி இனி ஆச்சும் நிம்மதியா இருக்கலாம்னு பாத்தா, அங்க தான் ஒரு ட்விஸ்ட்,பொறந்த கொழந்தைய அவங்க அம்மா வீட்டுக்கு கொண்டு போகக்கூடாதுனு எங்க தாத்தா சொல்லிட்டாரு,அதாவது அம்மாவோட மாமனாரு.காரணம் எங்க தாத்தா இந்த சாங்கியம்,சம்பிராதாயத்துல எல்லாம் அதிகமாவே நம்புறவரு.அதா,எங்க அம்மாவோட ஊருல பொறந்த இடம் சரியில்ல,மண்ணு சரியில்லனு அதுஇதுனு சொல்லி இருக்காரு.எங்க அம்மாவும் சரி கொழந்த நல்லதுக்குதான சொல்றாங்கனு,இங்கயே இருந்துட்டு இருக்காங்க.அம்மாவோட அம்மா மட்டும் அடிக்கடி இங்க வந்து பாத்துட்டு பாத்துட்டு போவாங்க.இப்படியே போய்டு இருந்துச்சு.இது நான் பொறந்தப்போ மட்டுமில்ல,என் தம்பி,தங்கச்சிக்கும் இவங்களுக்கும் இதே நெலம தான்.நாங்களும் அங்க போனதே கிடையாது.போனாலும் ஒடனே வந்துடுவோம்.எல்லாருக்கும் பாட்டி ஊருனா அவ்ளோ ஆசையா இருக்கும்,ஆனா எங்க கெரகம் நாங்க அங்க போனதே கிடையாது.
ஆனா இப்போ அப்படி கிடையாது.இப்போ அடிக்கடி எங்க பாட்டி ஊருக்கு போய்டு வரோம்.அந்த டைம்ல எங்க அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டாங்க.என்ன இருந்தாலும் மூனு கொழந்தைய பெத்துட்டு,அம்மா வீட்டுக்கு போகலனா,எல்லா பெண்களுக்கும் வருத்தமாக தான் இருக்கும்.
இப்பவும் நாங்க வளர்ந்த பெறகும் சரி, எங்கள வளத்த அப்புவும் சரி ரொம்பவே கஷ்டப்பட்டாங்க.வெளியில தெரியுற கஷ்டம் கொஞ்சம்தான்,ஒரு 10 சதவிகதம் இருக்கும்.ஆனா,மனசுக்குள்ள சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டம் நெறையவே இருக்கும் .இவங்க கஷ்டப்பட்டாலும் எங்கள கஷ்டம் தெரியாம தான் வளத்தாங்க.எல்லா அம்மாவும்,அப்பாவும் பன்ற தப்ப இவங்களும் பன்னாங்க.பொதுவா,பெத்தவங்க படுற கஷ்டம் பசங்களுக்கும் தெரியனும்,அப்போ தான் பசங்களுக்கு சின்னவயசுலயே பொறுப்பும்,தன்னம்பிக்கையும் அதிகமா வரும்ங்கிறது என்னோட கருத்து.இவ்ளோ சொல்றியே,உனக்கு அந்த பொறுப்பு வந்துச்சானு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது.எனக்கும் அந்த பொறுப்பும் தன்னம்பிக்கையும் கொஞ்சம் லேட்டா தான் வந்துச்சி.அதனால தான் இப்போ எங்க அம்மாவ கஷ்டப்படாம பாத்துக்க முடியுது.
எங்க அம்மா கஷ்டப்படுவாங்க.வீட்ல நடக்குற சின்ன சின்ன பிரச்சனைக்கு.ஆனா அது தவிர வேற எந்த கஷ்டமும் அவங்களுக்கு இல்ல எனக்கு தெரிஞ்சி.இத்தன வருசமா எங்கள கொளுத்து வேல(கொத்தனாருக்கு சித்தாளு வேல) செஞ்சி வெய்யில்லயும்,மழையிலயும் கஷ்டப்பட்டு படிக்க வச்சி,வளத்து ஆளாக்குனாங்க.ஆனா இப்போ அவங்கள நாங்க வளக்குறோம்.அவங்களோட சின்ன சின்ன ஆசைய எல்லாம் கேட்டு கேட்டு செய்றோம். அப்போ அவங்க முகத்துல அந்த சிரிப்ப பாக்கும் போது எதோ சாதிச்சா மாதிரி ஒரு தெம்பு பெறக்குது.
இந்த கதையெல்லாம் எங்கம்மாகிட்ட ஒக்காந்து ஒரு நாள் கேட்டேன்,அப்போ அழுதுகிட்டே சொன்னாங்க இத எல்லாம்.அதனால எல்லாரும் அவங்க அவங்க அம்மா அப்பாகிட்ட ஒக்காந்து அவங்களோட கதைய கேளுங்க.
நான் பாத்த வரைக்கும் அம்மா இருக்கும் போது அவங்க ஆசைப்பட்டத பன்னாம,அவங்கள சரியா கவனிச்சிக்காம இருப்போம்.ஆனா அவங்க இல்லாத அப்புறம் டெய்லி ஸ்டேட்டஸ் போடுறது,அவங்க பேற பச்சகுத்திக்குறதுமா தான் இருக்கோம்.
அம்மா இல்லாத போது,என்னதான் நாம விழுந்து விழுந்து செய்தாலும் அவர்களுக்கு தெரிவது இல்லை,
அதையே,இருக்கும்பொழுது,நாம் காட்டும் பாசமே அவர்களுடைய ஆனந்தத்திற்கு ஈடுஇணை இல்லை.
எதற்காகவோ நேரத்தை செலவிடும் நாம்,
நம்மை பெற்ற தாயிக்கு நேரத்தை செலவிடுவோம்.
அவங்களுக்கு தேவ காசோ,பணமோ கிடையாது,நம்மிடமிருந்து கிடைக்கும், பாசம் மட்டுமே..

Comments
Post a Comment