பூக்குழி - பெருமாள் முருகன்
புத்தகத்தின் பெயர்: பூக்குழி ஆசிரியர்: பெருமாள் முருகன் பூக்குழி நாவல் - இக்கதையில் புதிதாக எதுவொன்றும் இருந்துவிடவில்லை. பல காலமாக தொடர்ந்துக்கொண்டிருக்கும், பல கதைகளிலும் படைப்புகளிலும் வெளிவந்த அதே கதை தான். ஒவ்வொரு கதையும் அதே அளவு கனத்தை சுமக்கிறது. எதிர்ப்பார்த்த முடிவுதான் என்றாலும் நெஞ்சில் பெரும் பாரத்தை கடத்துகிறது. எத்தனை பேரை சாதி வெறி காவுக்கொண்டிருக்கும்? சாதிவெறியில் ஊறிப்போன ஒரு கிராமத்தில் பிறந்தாலும் அப்பாவியாகவே இருக்கும் குமரேசனை என்னவென்று சொல்வது? இவ்வளவு காலம் அதே ஊரில் இருந்தாலும், வேறு இனத்தில் பிறந்த சரோஜாவுடன் வாழ விட்டுவிடுவார்கள் என்று நினைத்த அவனது அறியாமையை என்னவென்று சொல்வது? தர்மபுரி இளவரசன் - திவ்யா காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட கொடும் நிகழ்வுகளே இந்த நாவலுக்கு அடித்தளமாக பார்க்கப்படுகிறது. இதனை தர்மபுரி இளவரசனுக்கு சமர்ப்பித்துள்ளார். ஆனால் பூக்குழியில் வரும் நாயகன் குமரேசன் இளவரசன் போல் பட்டியலினத்தை சேர்ந்தவன் அல்ல. திவ்யா போல சரோஜா உயர்சாதியல்ல. இருப்பினும் சாதி மறுத்து திருமணம் செய்து கொள்ளும் கணவன் மனைவியர் சமுதாயத்...