"கறிக்கடை மாமா"

               "கறிக்கடை மாமா"

வெள்ளிக்கிழமை மங்கலம் பொங்கனு பக்கத்து வீட்ல இருந்து அட்வெர்டைஸ்மென்ட் சாங்க் கேட்டுட்டே எந்திரிச்சேன். எந்திரிச்ச ஒடனே,யப்பா மாமா கிட்ட வண்டிய வாங்கிட்டு மீஞ்சூர் போய்டு கறி எடுத்துட்டு வாப்பானு அம்மா சொன்னாங்க. சரினு நானும் பல்ல வெலக்க போனேன். அதுக்குள்ள எங்க பக்கத்து வீட்ல வண்டிய கேக்க கூச்சப்படுவேனோனு அம்மாவே வண்டிய கேட்டு வாங்கிட்டாங்க. நான் போய் வண்டிய எடுத்துட்டு அப்பாவ கூட்டிட்டு கறிக்கடைக்கு போனேன்.

அங்க போய்டு வண்டிய நிறுத்தினது தான், எப்படி பிரியாணி கடையில டபரா தட்டுற சத்தம் கேக்குமோ அதே போல சுத்தி சுத்தி கறி வெட்டற சத்தம்.திரும்புற எடமெல்லாம் பீஃப் கடை தான். எல்லா கடையிலயும் நல்ல கூட்டம். இதுல எங்கடா வாங்குறது நாமனு நெனச்சிட்டு இருக்கப்போ, அப்பா வழக்கமா வாங்குற கடைக்கு கறி வாங்குற கடைக்கு போனாரு. வாழ்க்கைக்கும் சரி, கறிகடைக்கும் சரி நமக்கு வழிகாட்டுறது அப்பா தான. நானும் அவரு பின்னாடியே போனேன்.

அங்க போனதும் 'வா மாமா வா மாமா என்ன மாமா நீ போனே பண்ண மாட்ற,மறந்துட்டியா என்னனு' அந்த கறிகடைக்காரரு உரிமையா பேசுனாறு.எனக்கு ஒரே ஷாக்கு என்னடா இது,கருப்பனுக்கு கறிக்கடையில கூட ப்ரன்ஷிப்பானு.

அப்பா கிட்ட பேசிட்டு ஒடனே என்ன திரும்பி பாத்து 'அடடே பெரிய‌ மாப்ளயா,வாங்க மாப்ள.. நல்லா இருக்கீங்களா.  நா சின்ன மாப்ள தான் வந்து இருக்காருனு நெனச்சேன்னு, கறி அறுத்து இந்தாம்மா நூறாவா கொடுனு வேல செஞ்சிட்டே பேசிட்டு இருந்தாரு..

கூட்டத்துல ஒரு சத்தம் 'பாய் எனக்கு ஈரல் ஒரு கிலோவும் மூள எலும்பும் போட்டுவிடு பாய்'னு. அவரும் சரிபானு, கம்பில தொங்கவிட்டு இருந்த கறிய அறுத்து கொடுத்துட்டு இருந்தாரு...

லேட்டா வந்த எல்லாருக்கும் கறி வெட்டி கொடுத்துட்டு இருந்தாரு.ஆனா எங்களுக்கு கொடுக்கவே இல்ல.. அப்போ தான் அப்பா என்னபானு  கேக்க,அதுக்கு அவரு எதோ குசுகுசுனு பேசுனாரு.. நமக்கு சுத்தமா கேக்கவே இல்ல,அப்பா கிட்ட என்ன சொன்னாருனு கேட்டேன் அவரும் சொல்லல. உடனே அந்த கறிவெட்ற‌ மாமா,  மாப்ள் நிக்காதீங்க அந்த‌ படியில உக்காருங்க. மாமா நல்ல தரமான கறியா போட்டு அனுப்புறேன்னு சொல்லி கடையில இருக்க எல்லாருக்கும் என்னென்ன வேணும்னு கேட்டு அனுப்பிட்டே இருந்தாரு. 

எனக்கு ஒரே ஆச்சர்யம். சின்ன வயசுல இந்த பக்கம் வரும்போது, யாரும் மாட்டிக்கறி வாங்க வரமாட்டாங்க. ஆனா இப்போ வெள்ளிக்கிழமைனு கூட பாக்காம ரேசன் கடையில் நிக்குறா மாதிரி வரிசக்கட்டி நிக்குறாங்கனு.

கடையில மாட்டி இருந்த கறி எல்லாம் வித்து தீந்துட்டுச்சு.நான் அப்பாவ பாத்தா அவரு இருப்பானு தலையசைச்சாரு‌. தம்பி பெரிய மாப்ள ரொம்ப நேரமா வெயிட் பண்றாரு சீக்கிரம் எடுத்துட்டு வானு, சவுண்ட் கொடுத்த உடனே பிரஷ் பீஸ்ஸா உள்ள இருந்து ஒரு மாட்டோட தொட பார்ட்டா எடுத்துட்டு வந்து கம்பியில மாட்டி எங்களுக்கு வெட்டி கொடுத்தாரு அந்த கறிக்கடை மாமா. இதுக்கு தான் மாப்ள் வெயிட் பண்ண வச்சேன் நல்ல கறி இது அதான்.நீங்க ஒன்னும் தப்பா நெனச்சிக்காதீங்க.‌ 

மாமா ..இந்தா ...மாப்ளைக்கு இந்த எலும்ப தட்டிப்போட்டு சூப் வச்சிக்கொடு..இந்தா இந்தா புடி... சரி பா வரேன்னு சொல்லி அப்பா கிளம்புனாரு.. என்ன காசு கொடுக்காம போறாருனு,அப்பா காசு கொடுப்பானு சொல்ல,அதுக்கு அந்த மாமா, மாப்ள அடுத்த வாரம் தா,இல்லனா விடுனு சொல்றாரு..என்னடா இதுனு நெனைக்க அப்புறம் அப்பா இந்தா பா காசுனு கொடுத்தாரு.. அப்புறம் தான் தெரிஞ்சது அவங்க என்ன பிராங் பண்ணாங்கனு... 
சரி‌ மாமா வரேன்னு கிளம்பி பைக்க எடுத்துட்டு வீட்டுக்கு போனோம்.

போகும்போது தான் அப்பா சொல்றாரு, அவரு உனக்கு நியாபகம் இல்லாயாடானு கேட்டாரு.இல்ல பா னு சொன்னேன். நீ சின்னவனா இருக்கும்போது அங்க தான் நாம் கறி‌ எடுப்போம்,அதா அவரு உன்ன மாப்ள மாப்ளனு கூப்டுறாரு. காசுக்கான பழக்கம் இல்லடா இது பாசத்துக்கான பழக்கம்..

என்னப்பா அவ்ளோ கூட்டம் இருக்கு அங்க இருக்க பீஃப் கடையில‌‌..ஆமாடா இப்போ எல்லாரும் சிக்கன் கடைக்கு கூட போகல.இங்க தான் வராங்க இந்த கொரோனா வந்ததுல இருந்து..ஓஓஓஓஓ ஹோ...சரி‌ சரி பா ..

இன்னைக்கு ஒரு புது உறவு நமக்கு கெடச்சது.கள்ளம்கபடம் இல்லாத ஒரு உறவு அந்த கறிக்கடை மாமா..

சரி சரினு வீட்டுக்கு வந்து,மாட்டுக்கறியோட மூள எலும்ப(நள்ளி எலும்ப) அம்மா சூப் வச்சி கொடுத்தாங்க. அத ரெண்டு கிளாஸ்ல எடுத்த வச்சிட்டு.ஒன்னு நான் குடிச்சிட்டே இந்த ஸ்டோரிய எழுதுறேன்..இன்னோனு நீங்க குடிச்சிட்டே படிங்க... 

-எழில் ஆதித்தமிழன் 
03.02.204

#beef #beeflover #beefcurry

Comments