வாழை
படம் - வாழை
இயக்குனர் -மாரி செல்வராஜ்.
1999ல் நடக்கும் கதை இது, கதையின் நாயகன் சிவனைந்தான், தன்னோட அம்மா,அக்காவோட புளியங்குளத்தில வாழ்ந்துட்டு வராரு. என்னதான் சேட்டைகள் செஞ்சாலும் படிப்பில கெட்டிக்காரன், தன்னோட வகுப்பிலேயே பர்ஸ்ட் மார்க் வாங்கக்கூடிய மாணவனா இருக்கான். ஆனா வறுமையில வாழுற குடும்பம். வாங்குன கடன அடைக்கனும் அப்படிங்கிறதுக்காகவும்,அம்மாவோட வற்புறுத்தலலுக்காகவும் ஸ்கூல் லீவு நாள்ல வாழைத்தார் சுமக்க போறான். அவ்ளோ வெயிட் இருக்குற அந்த வாழைத்தார சின்ன பையன் சுமக்கும்போது அதனால் ஏற்படுற உடல்வலியையும் அந்த வாழ்க்கைய வாழ்றவங்களோட வாழ்வியல கண்முன்னே வந்து நிறுத்துது..
இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவன் விரும்பக்கூடிய பள்ளிக்கூடமும்,அங்க அவன கவர்ந்த டீச்சரையும் அழகா காட்டி இருக்காரு.. டீச்சரோட பேர நோட்டுல எழுதி வைக்கிறது,அவங்க கைக்குட்டைய எடுத்துவைக்கிறதுனு ஸ்கூல்ல நமக்கு இருந்த டீச்சர பத்தி நியாபகப்படுத்துது.
ஸ்கூல் ஆண்டு விழாவுல டான்ஸ் ஆடுறதுக்கு பேர் குடுத்துட்டான் சிவனைந்தன். அம்மாவுக்கு தெரியாம அக்கா இவன ஸ்கூல்க்கு அனுப்பி வைக்குறா... ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும்போது தான். சிவனைந்தனுக்கு அதிர்ச்சி காத்துட்டு இருக்கு .அது என்ன பேரதிர்ச்சி? காய் சுமக்க போன அக்காவுக்கு என்ன ஆச்சுனு தான் கலங்கடிக்கும் வாழையோட மீதி கதை
ஒரு ரூபாய் கூலியை கூட்டி தர கேட்டதுக்காக வாழைத்தோப்பு முதலாளி அலட்சியமாக செய்யும் முதலாளித்துவமான ஒரு விஷயத்தால் ஏற்படும் மிகப்பெரும் துயரை அப்படியே கண்ணுமுன்னாடி காட்டி பார்ப்பவர்களை கலங்கடிக்க செஞ்சி இருக்காரு...
அழகா சுவையா இருக்கும் வாழைப்பழத்துக்கு பின்னாடி அதுக்காக உழைச்சவங்க எவ்ளோ கஷ்டப்பட்டாங்கனு தெளிவா காட்டி இருக்காரு .பசிக்கும் பஞ்சத்துக்கும் முன்னாடி என்ன நடந்தாலும் நம்ம கண்ணுக்கு தெரியாது.அப்படி ஒரு சீன் இந்த படத்துல இருக்கு.படத்தோட மிகச்சிறந்த சீன்னு அத சொல்லலாம்.
மொத்தத்துல வாழை அதுக்கு பின்னாடி உழைச்சவங்களோட வாழ்வியல மிகத்தெளிவா காட்டி இருக்காரு மாரி செல்வராஜ்...
வாழை - எளியவர்களின் வலி..
-எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment