யாருக்கு சுதந்திரம்?

யாருக்கு சுதந்திரம்? 


சுதந்திர இந்திய நாட்டில் 
சுதந்திரம் இல்லை வாழ்வில்
பாழாய் போன நாட்டில் 
பட்டினி தானே வீட்டில் 

வெள்ளையனிடம் சுதந்திரம் வாங்கி முதலாளியிடம் கொடுத்துட்டான்
இந்திய நாட்டை ஆள்றதுக்குனு பரம்பரையை வளத்துட்டான்
பேச்சுரிமை இருக்கு  நாட்டுல நம்ம உரிமைய கேக்க முடியல
ஜனநாயக நாட்டுல அடக்குமுறைகள் தாங்கல

தனிமனிதனை பணத்தை சேர்க்க சட்டத்தில் இடம் கொடுக்குறான்
அது கூடாது என்று சொல்கிறவர்களை அதிகாரம் வச்சு ஒடுக்குறான்..

சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் கலவரம் நடக்கும் நாடு சுதந்திர இந்திய நாடு...

பெண்  டிரஸ் ஒழுங்கா போடனும்,ஆண்கள்‌முன்னாடி கால்மேல் கால போடக்கூடாது,பசங்க கூட பேசக்கூடாது,இருட்டுறதுகுள்ள வீட்டுக்கு வந்துடனும் இப்படி பெண்களுக்கு முழு‌சுதந்திரம் கொடுக்கு நாடு நம்முடைய சுதந்திர இந்திய நாடு....

பெண்களை தெய்வமாக மதிக்கும் எங்க நாட்டுல, மாதவிடாய் காலங்கள்ல நீ தீட்டு கோவில்குள்ளார போகக்கூடாதுனு அந்த தெய்வத்தையே தீட்டாக்கும்‌ நாடு எங்க சுதந்திர இந்திய நாடு ...

பெண் சுதந்திரம், கருத்து சுதந்திரம்,தனிமனித சுதந்திரம் இல்லாத இந்திய நாடு
இதுக்கு சுதந்திர தினம் ஒரு கேடு..?

                           -எழில் ஆதித்தமிழன்

Comments