மூன்றாம் பிழக்கடை
புத்தகத்தின் பெயர் : மூன்றாம் பிழக்கடை
ஆசிரியர்: கீ.வி.ஜெயஶ்ரீ
நல்ல புத்தகங்கள் படிக்கிறப்ப நமக்கு ஏற்படுத்துற தாக்கத்த மத்தவங்களுக்கும் ஏற்படுத்தனும்னா அவங்களுக்கு அந்த புத்தகத்த பத்தி சொல்லனும். அப்படி ஒரு புத்தகம் தான் ஆசிரியர் ஜெயஶ்ரீ எழுதிய "மூன்றாம் பிழக்கடை"குறுநாவல்.
உயர்குலத்துல பொறந்து இருக்கும் பெண்களோட வலியையும், அவங்கள சாங்கியம், சம்பிரதாயம்னு சொல்லி அடிமைப்படுத்தி வச்சிருக்கும் ஆண்களை பத்தியும் தோலுறுச்சி காட்டி இருக்காங்க ஆசிரியர் ஜெயஶ்ரீ.
பார்ப்பன சமூகத்துல பிறந்து இருக்கும் பெண் பிரசவ வலி படுறா.அவளுக்கு நல்லபடியா கொழந்த பொறக்கனும்னு சேஷ பாட்டி விபூதி பூசி சிவபெருமான வேண்டிக்கிறா.கொழந்தையும் நல்லபடியா பொறக்குது.என்ன கொழந்தனு சேஷ பாட்டி தெரிஞ்சதும்,அடக்கடவுளே இதுக்கா உன்ன ராவும்,பகலுமா வேண்டுனேன்னு வருத்தப்படுறா.காரணம்,அங்க பொறந்தது ஒரு பெண் கொழந்த.
என்னயா இது பெண் கொழந்த பொறந்ததுக்கு இந்த பாட்டி இவ்ளே வருத்தப்படுறா,இவங்களுக்கு ஆண் கொழந்த தான் வேணும் போல.சரியான கல்நெஞ்சம் கொண்ட பாட்டினு படிக்கிற வாசகர்களுக்கு முதல்ல சேஷ பாட்டி வில்லியா காட்டப்படுறா ...
அதுக்கு அப்புறம் தான் கதையை முழுசா படிக்கிறப்ப தெரியுது, அவ தான் கதையோட ஹீரோயின்னு. பலாப்பழம் வெளிய பாக்க சொரசொரனு அறுவறுப்பா பயங்கரமா இருக்கும்,ஆனா, அதுக்குள்ள இருக்க சுலைகள் எல்லாம் அப்படி ஒரு இனிப்ப கொடுக்கும்.
அந்த மாதிரி தான் சேஷ பாட்டிய முதல்ல வில்லி மாதிரி காட்சிப்படுத்திட்டு, அதுக்கு அப்புறம் காமாட்சிங்கிற இனிப்பான சுலைய வெளிக்காட்டி இருக்காங்க ஆசிரியர் ஜெயஶ்ரீ.
யாரு இந்த காமாட்சி.எப்படி அவ சேஷ பாட்டியா மாறுனா அப்படிங்கிறது தான் கதேயோட முற்றுப்புள்ளி.
இந்த புத்தகம் மூலமா பெண்கள் நெறைய தெரிஞ்சிகிட்டு வெளிய வரனும்னு ஆசிரியர் சொல்லலாம். ஆனா, இது மூலமா பெண்கள கலாச்சார ரீதியா அடிமைப்படுத்தப்பட்டு இருக்க ஆண்கள் தான் அவங்க பார்வையில இருந்து வெளிய வரனும்.
"கணவன் இறந்த பின் உயிரை மீட்டுக்கொண்டு வர எந்த காரியமோ மந்திரமோ தெரியாது என்கிறபோது,செத்தவனை சொர்கத்துக்கு பயணப்பட வைக்க செத்தவனின் பசியை ஆற்ற மட்டும் எங்கிருந்து மந்திரங்களை கற்றது என்று தான் விளங்கவில்லை.."னு புத்ததத்துல சொல்லி இருக்கிற இந்த விசயம் வாசகர்களோட வரவேற்பா அமையும்..
"இங்க இருக்கக்கூடிய மொத்த அரசியலும் பெண் உடல் மீது தான் நடந்துட்டு இருக்கு. ஒரு மதம் என்ன பேசுதுனா. பெண் என்ன டிரஸ் போடனும்,என்ன டிரஸ் போடக்கூடாதுனு பேசது. ஒரு பெண் எப்போ வீட்டுக்கு வரனும்னு பேசுது. யார் நல்லவ, யார் கெட்டவனு பேசுது. எத்தன மணிக்கு எழுந்துக்கனும்,எப்போ தூங்க போகனும்னு பேசுது.எல்லா மதமும் இத தான் பேசுது.
மதத்தோட ஆகப்பெரிய பிரச்சனை, பெண் என்ன பெண் என்ன டிரஸ் போடனும்,அவ யாருகிட்ட பேசலாம்,யார திருமணம் செய்யலாம், திருமணம் செய்றவன் செத்து போய்டா அவ என்ன ஆகனும்னு தான்.இந்த சாதி பெருமை,இன தூய்மை எல்லாம் பெண்ணோட உடல் மேல கட்டமைக்கப்பட்டு இருக்குனு" இயக்குனர் ராம் சொன்னது இந்த புத்தகத்தோட ஒத்துப்போகுது.
இங்க இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை,ஆண்களோட பெண்கள் மேலானவர்கள்னு பெண்களே ஒப்புக்கொள்ள தயங்குவது தான். இப்படி தயங்கக்கூடிய பெண்களின் மனநிலைய மாற்றக்கூடிய ஒரு புத்தகமா மூன்றாம பிழக்கடை இருக்கும்னு படிக்கும் போதே தெரியுது...
அறிவாசான் அம்பேத்கர்,தந்தை பெரியார், சாவித்திரி பாய் பூலே, மார்க்ஸ் இப்படி ஆகச் சிறந்த தலைவர்கள படிச்ச அப்புறமும், இந்த காலக்கட்டத்துல கூட பெண்கள், ஆண்கள் சொல்லும் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்னும் கம்பி கட்டுற கதைய நம்பி அடிமைப்பட்டு இருக்குறது வேதனையான ஒரு விசயா இருக்கு.
பார்ப்பன சமுகத்துல மட்டுமில்லாம, அனைத்து சமுதாயத்துலயும் குடும்ப கவுரவம், பண்பாடு,கலாச்சாரம்னு அடிமைப்பட்டு இருக்குற பெண்களையும், அடிமைப்படுத்தி இருக்குற ஆண்களையும் "மூன்றாம் பிழக்கடை" புத்தகம் மூலமா வெளிக்கொண்டு வர ஆசிரியர் ஜெயஶ்ரீ உடன் வாசகர்கள் பயணிக்குறா மாதிரி எளிமையா எழுதி இருக்காங்க...
சமூகத்துல இன்னமும் தங்களை உயர்சாதி,ஆண்டப்பரம்பரைனு மார்த்தட்டிக்கொள்ளும் ஆண்களும், அவங்க வீட்ல பொறந்த பெண்களும் படிக்க வேண்டிய புத்தகம் " மூன்றாம் பிழக்கடை".
" இருளில் மூழ்கி இருக்கும் பிழக்கடையில், மூன்றாம் பிழக்கடை புத்தகத்தின் மூலமா வெளிச்சம் மூட்டுவோம்."
-எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment