மீட்சி -ஓல்கா

புத்தக விமர்சனம் : மீட்சி
ஆசிரியர்      : ஓல்கா
தமிழில்       : கொளரி கிருபானந்தன்
 




கற்பு என்ற பண்பை பெண்களுக்கான பண்பாக மட்டும் பாக்குற வழக்கம் காலம் காலமா இருந்துவரும் ஆணாதிக்க சமுதாயத்தோட ஒரு வெளிப்பாடு தான். இத காட்டுற விதமா தான்,பல புராணங்களும்,இலக்கியங்களும் ஆண்களால எழுதப்பட்டு இருக்கு. அதுமட்டுமில்லாம ”கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்”,அப்புறம் ”கணவனே கண்கண்ட தெய்வம்”இப்படி நெறைய பழமொழி அதுக்காகவே உருவாக்கப்பட்டது தான். 


சமுதாயத்தோட ஒரு அங்கமாகவே விளங்கும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டவைகளே தர்மம்னு ஏத்துகிட்டு பின்பற்றும் நிலைமை இன்னைக்கு வரைக்கும் இருக்கு.

புராணங்கள்ல வரும் கதாபாத்திரங்களுக்கு, ஆண்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எல்லம் நியாயம் கேட்க தான் ஆசிரியர் ஓல்கா தெலுங்குல நெறைய சிறுகதைகள எழுதி இருக்காங்க. அப்படி ஒரு தொகுப்பு தான் மீட்சி. 
இராமாயணத்தோட சீதைதான் இந்தக் கதையோட முக்கிய கதாபாத்திரம் அப்படின்னாலும், ஆசிரியர் கற்பனையாக சீதையை இராமாயணத்தோட மற்ற பெண் கதாபாத்திரங்களான சூர்ப்பணகை, அகல்யா, ரேணுகாதேவி, ஊர்மிளா இவங்களோட அனுபவத்தின் மூலமா சீதை தன்னையே இராமன் மற்றும் குழந்தைகளிடம் இருந்து மீட்டெடுப்பதே இந்தக் கதையின் சாரம்சம். 


முக்கியமாக, சீதை தன் மீதுள்ள அதிகாரத்தை மீட்டெடுக்கும் அதே நேரத்தில் மற்றவர் மீதுள்ள தன் அதிகாரத்தையும் விட்டுடுறா.
ஆணுக்கெதிரான பெண்ணின் போர்க்கொடியை விட அறிவின் ஆதிக்கம் இருக்கவேண்டிய சமுகத்தை உருவாக்குவதே சாலச் சிறந்தது என்பது என் கருத்து.
                                                                                                             -எழில் ஆதித்தமிழன்

Comments