அம்மா வந்தாள் -தி.ஜானகிராமன்
புத்தகத்தின் பெயர் : அம்மா வந்தாள்
ஆசிரியர் : தி.ஜானகிராமன்
இந்த புத்தகம் ஒரு சர்ச்சைக்குரிய புனித நூல்னு சொல்லலாம்.
அம்மா வந்தாள் இது ஒரு 50 வருசத்துக்கு முன்னாடி எழுத்தப்பட்ட நாவல். 50 வருசத்துக்கு முன்னாடி அம்மா அப்படிங்கிறவங்க யாரு அப்படின்னு யோசிச்சு பாத்தா,வீட்ல சோறு ஆக்குறது, துணி துவைக்கிறது, அதுமட்டுமல்லாம பசங்கள கிளப்பி பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறது.கணவனும் குழந்தையும் தான் தன்னோட உலகம், அது தவிர வேற உலகமே கெடையாது அப்படிங்கிறவங்க தான் அம்மாவ நமக்கு தெரிவாங்க.
இந்த மாதிரி இருக்கும் போது, தன்னோட மனம் போன போக்குல, தன்னோட விருப்பத்துக்காக கணவனையும் மீறி இன்னொருத்தவங்க கூட உறவாடுற அந்த அம்மாவ பத்தி படிக்கும் போது நெறைய பேருக்கும் கொஞ்சம் ஷாக்கா தான் இருக்கும்.
கதையோட மிக முக்கிய கதாபாத்திரங்களா நாம அஞ்சு பேர எடுத்துக்கலாம். அவங்க யாருனா, அப்பு, அலங்காரம், தண்டபாணி, சிவசு, இந்து. அப்பு, அப்படிங்கிற கேரக்டர் தான் இந்த நாவலோட ஹீரோ. தன்னோட நாலு வயசுல, தன்னோட அப்பாவால, இந்துவோட அத்தை பவானியம்மாள் நடத்தும் பாடசாலைக்கு மந்திரங்கள், உபநிசங்கள் கத்துக்க போகும் அப்பு, தன்னோட 24வது வயசுல திருச்சியை ஒட்டியுள்ள அந்த கிராமத்தை விட்டு கிளம்புறான். அப்போ இந்து அவன் மேல தனக்கு இருக்க காதல சொல்ல, அது தன்னோட அம்மாவுக்கு செய்யும் துரோகம்னு சொல்லிட்டு கிளம்புகிறான்.
திருமணம் அப்படிங்கிறது பெண் உடலின் மீது ஆணுக்கு வழங்கப்படும் உரிமையாகவே ஆண் சமூகம் பார்த்துக் கொண்டிருக்கும் காலத்துல, அது பெண்ணோட பார்வையில எந்தவிதத்தில பார்க்கப்படுது அப்படிங்கிறத 50 வருசத்துக்கு முன்னாடியே பேசியிருக்கிறது இந்நாவல்.
மைய கதாபாத்திரங்களா இருக்கும் அலங்காரமும், இந்துவும் ஒரே விதமான பிரச்சனையை இரு வேறுவேறு சூழ்நிலையில சந்திக்கும் பெண்களா இந்த நாவ்ல்ல படைக்கப்பட்டு இருக்காங்க. அலங்காரம் தன்னோட கணவர் தண்டபாணி மூலமா மூனு குழந்தைகள பெத்த அப்புறம், அவளுக்கு குடும்பத்துல இருக்கவங்களுக்கு எல்லாம் தெரியும் அளவுக்கு வேறொரு ஆணுடன் உறவு ஏற்படுது.
இந்துவோட கதைய பாத்தோனா சின்ன வயசுலயே திருமணம் செய்யப்பட்டு, அவள் குழந்தை ஏதும் இல்லாமல் விதவை பெண்ணா இருக்கா. அவ அப்புகிட்ட என்ன சொல்றானா, சின்ன வயசுல இருந்து நான் உன்ன தான் மனசுல நெனச்சிட்டு இருந்தேன். என்னோட உடலை மட்டும் கட்டியாண்டாள் நான் அவன் பொண்டாட்டியாகி விடுவேனாஞ்” இந்து தன் கணவன் பரசு இறந்தவுடனே தன் மனம் கவர்ந்த அப்பு படிச்சுட்டு இருக்கும், பாடகசாலைக்கே திரும்பிடுறா.
அலங்காரத்தின் விசயத்தில் அவை நேர்மாறானவை.. மூன்று குழந்தைகள் பிறந்த பின்னரே.. அவளுக்கு தன் கணவன் மேல சண்ட வருது. மனம் கணவனிடம் இருக்காத அப்புறம் தன்னை தொட அவரை அலங்காரம் அனுமதிக்கல. தன் உடலை யார் தொடவேண்டும் என்னும் உரிமைய தாலி கட்டிய ஒரே காரணத்துக்காக தன்னோட கணவனுக்கு கொடுக்க அவள் தயாரா இல்லை. தன் உடல் மீதான தன்னோட உரிமைய அவளே தீர்மானிக்கிறா. இருந்தாலும் தன் குழந்தைகளின் எதிர்காலத்தை பாத்து அவ வேறு வழியில்லாம தன்னோட கணவருடனே வாழ்றா.
நாவல்ல வரும் குருகுலவாசம் போன்ற பாடகசாலையும், பாடக சாலைக்கு தங்கள் குழந்தையை அனுப்பும் நடுத்தரவர்க்க குடும்பமும், உறவுகள்ல ஏற்படும் சண்டைகளை கண்டிக்காமல் இருக்கும் கணவன் அப்படின்னு, இந்த காலத்துக்கு ஒத்து போகாத விசயமா இருந்தாலும், இது 50 வருசத்துக்கு முன்பு இருந்திருக்கலாம்.
பெரும்பாலான பெண்கள் தங்களை அலங்காரம் போல காட்டிக்க துணிவதே இல்லை. இன்றும் மூனு குழந்தைகள பெத்த அப்புறமும், இன்னொரு ஆம்பள மேல எனக்கு ஆசை வந்ததே இல்லனு சொல்லும் பொய்களே எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாத, தித்திக்கும் அமுதமா இனிப்பதால நாம் அந்த பொய்களுக்குள்ளாக வாழ விரும்புறோம். ஆனா, நடக்குற கள்ள உறவு தொடர்பான கொலை எல்லம், உண்மை அப்படி இல்லை என்பதையே உரக்க சொல்லுது. மேலும் அலங்காரம்,இந்து போன்ற பெண்கள் இன்னும் இந்த சமூகத்தில வேறு வேறு வடிவங்கள்ல வாழ்ந்துட்டு தான் வறாங்க. என்பதால, இந்த காலகட்டத்துக்கான பார்வைக்கும் இந்த நாவல் பொருந்தித் தான் போது..
மொத்தத்தில இதன் முன்னுரையில் எழுத்தாளர் சுகுமாரன் கூறியதைப் போல ”இந்த ’அம்மா வந்தாள்’ மீறலின் புனிதமான பிரதி” ஆகும்.
இந்த சமூக கட்டமைச்சு இருக்கக்கூடிய கோட்பாடுகள உடைச்சு எறியக்கூடிய புத்தகமாக இது இருக்கு....
-எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment