தபால் பெட்டி எழுதிய கடிதம் - எஸ்.ராமகிருஷ்ணன்



புத்தகத்தின் பெயர் : தபால் பெட்டி எழுதிய கடிதம்

ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

தேசாந்திரி பதிப்பகம்

விலை -70

பக்கங்கள்- 56



குழந்தைகளுக்கான குறுநாவல். இந்த நாவலை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்த்தில் படித்துவிட்டேன். மிகவும் சிறிய நாவல். நாம் இதுவரை மனிதர்களிடையே உள்ள நட்பை பார்த்து இருக்கிறோம், உணர்ந்தும் இருக்கிறோம். இந்த கதை ஒரு தபால் பெட்டிக்கும் பள்ளி சிறுவனுக்குமான நட்பை விவரிக்கிறது.



தபால் பெட்டியும், கடிதமும் 80, 90 களில் வாழ்தவர்களின் வாழ்வில் இரண்டற கலந்தாயிற்று. இன்றைய WhatsApp, sms,email, facebook, Twitter மூலம் ஆயிரம் செய்திகள் கிடைக்க பெற்றாலும் அது ஒரு செய்தி மட்டுமே.

அன்று தபால்காரர் மூலம் கிடைக்கப்பெறும் காகிதம் எனும் தபால், உணர்வுகளை தாங்கி வரும் பொக்கிஷம். நிறைய மனிதர்கள் கடிதங்களுடன் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள் என்றும்‌ சொல்லலாம்.


கடிதம் எழுதும் பழக்கம் குறைந்ததால் ,தபால் துறை 40 ஆண்டுகளாய் வேப்பமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த டாமா எனும் தபால் பெட்டியை அகற்ற முடிவு செய்தனர். தபால் பெட்டிக்கு நண்பன் இருக்கிறான் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?


டாமா எனும் பெயர் தபால் பெட்டியின் நண்பனான தங்கமுத்து சூட்டியது.
மனிதர்களை போலவே கைவிடப்பட்ட தபால் பெட்டிகளும் பின்புறம் மெளனமாக கடந்தது.எவ்வளவு கடிதங்களை, பார்த்து சுமந்த தபால் பெட்டி இதுவரை ஒரு கடிதம் கூட எழுதியதில்லை.


கடிதம் எழுத விரும்பிய போது , அதனுடைய நண்பன் தங்கமுத்துவிற்கு எழுதியது. எழுத நினைத்த போது மறக்க முடியாத நினைவுகள் இருப்பதை உணர்ந்தது.

தங்கமுத்து, தனது மாமா வீட்டில் இருந்தே படித்தான். அம்மாவுக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் வாசித்து காட்டியே பெட்டியில் போடுவான். நாட்கள் செல்ல செல்ல தபால் பெட்டியுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தான். தபால் பெட்டிக்கு முதல்முறையாக டாமா என்று பெயரிட்டு மகிழ்ச்சியடைந்தான்.


தங்கமுத்து காகிதத்தில் கணகட்சிதமாக தொப்பி ஒன்று செய்தான்.அதை மகிழ்வோடு அணிந்து கொண்டது டாமா.

மொட்டை கடுதாசி போட வரும் நபர்,அணிலுக்கும், தபால் பெட்டிக்குமான நட்பு, சின்னசாமி, பூரணி ஸ்டோர் கணக்குபிள்ளை, அவருடைய டெல்லியில் காணாமல் போன மகளை தேடிச்சென்ற முதலாளிக்கு வரவு செலவு கணக்குகளை கடிதம் போடுவார். ஆச்சிக்கு லெட்டர் போடும் சின்ன பொண்ணு,

மாதவன் எனும் தபால்காரர் பற்றிய நினைவுகள், தனக்கு தானே லெட்டர் போடும் பழனி, மனைவிக்கு வரும் லெட்டரை கிழித்து போடும் முத்தப்பன், காந்திக்கு லெட்டர் போட்டு கொண்டே இருக்கும் கணபதி,பொய்யாய் லெட்டர் எழுதும் அம்பலவாணன், கண்ணீர் துளியுடன் மகளுக்கு கடிதம் எழுதும் சிந்தாமணியம்மாள், ஸ்டாம்ப் ஒட்டாம லெட்டர் போடுறவன்,லெட்டரை திருடி படிப்பவன்,

ஐந்து வயது குழந்தை ," அப்பா, நீ எப்போ வருவேனு " இப்படியாக பல நினைவுகளை பகிர்ந்து கொள்கிறது டாமா.






இறுதியாக யார் யாரோ எழுதியதை பத்திரமாக வைத்திருந்து அனுப்பிய தபால்பெட்டி, முதல்முறையாக தனது நண்பனுக்கு கடிதம் எழுதுகிறது. தபால்பெட்டி எழுதிய கடிதம்,எங்கோ வாழ்ந்து வரும் தங்கமுத்துவிற்கு எப்படி கிடைத்தது, நண்பர்கள் எப்படி சந்தித்தனர், அதன் பின் என்ன நடந்தது என்பதோடு மட்டும் முடியாமல், பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்கள் , பொருட்கள் மீது அன்பு,நன்றி செலுத்த வேண்டும் என அழகாய் உணர வைக்கிறது இந்த கதை.


முதல் தபால் பெட்டியின் நிறம் பச்சை,டல்ஹவுசி பிரபு இந்தியாவிற்கு அஞ்சல் துறையை அறிமுகப்படுத்தினார். பெர்சியாவோட ராணி அடோசா முதல் முறையா கடிதம்எழுதினாங்க போன்ற கூடுதல் தகவல்களுடன்.

தபால் பெட்டி எழுதிய கடிதம் படித்து முடித்தவுடன் நிச்சயம் தபால் பெட்டி மீதான பார்வையும், கடிதம் எழுதும் ஆர்வமும் நமக்கு கிடைக்கு...


தபால் பெட்டி மற்றும் கடிதம் இவை இரண்டுமே 80,90 களில் வாழ்ந்தவர்களின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கித்திருக்கும் என்று இந்த புத்தகத்தின் மூலம் வாசகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார் ஆசிரியர்.



-எழில் ஆதித்தமிழன்

Comments