என் முதல் கதாநாயகன்
என்னோட முதல் கதாநாயகன்.
தான் காணாத உலகத்த தன் புள்ள பாக்கனும்னு நினைச்சி இரவுபகலா உழைக்கிறவரு என் அப்பா.
சின்ன வயசுல நான் கேட்டது எல்லாம் வாங்கி தரலனு, நான் கஷ்டப்பட்டதவிட , தன் புள்ள கேட்டு தன்னால வாங்கித்தர முடியலையேனு அனுதினமும் கஷ்டப்பட்டவரு என் அப்பா.
கண்டிப்பு அவரு கண்ணுல இருந்தாலும்,
பாசத்தை அருவிபோல மனுசுல தேக்கி வச்சிருக்கும் ஒரு நல்ல உள்ளம் படைச்சவரு என் அப்பா.
கோவத்துல என்ன கண்டிச்சிட்டு,கொஞ்ச நேரம் கழிச்சி,கடைக்கு போய்டு கடலமிட்டாய் வாங்கிட்டு வந்து என் கண்ணத்துல முத்தம் கொடுத்தவரு என் அப்பா.
கிராமத்து கழனில வரப்ப வெட்டி வெட்டி,
என்னை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி,புத்தகமா வாங்கி கொடுத்தவரு என் அப்பா.
தான் படுற கஷ்டத்தை தன் புள்ளையும் பட கூடாதுனு,என்ன நல்ல முறையில வளத்தவரு என் அப்பா.
காடு மேடு எல்லாம் வெறும் காலோட வேல செஞ்சி,
எனக்கு செருப்பு போட்டு நடக்க சொல்லித்தந்தவரு என் அப்பா.
கண்ணாடியில் என் முகத்தை பாக்கும்போது அதுல தெரியுறது நான் இல்ல,என் அப்பா.
அம்மா,எனக்கு தன்னோட இரத்தத்தை பாலாக்கி என்ன வளத்தா,
ஆனா, தன்னோட உடல்,பொருள்,ஆவி எல்லாத்தையும் தியாகம் செஞ்சி என்ன உருவாக்குனவரு என் அப்பா.
என்னோட வெற்றிய அவரோட வெற்றியா நெனச்சி சந்தோசப்படுறவரு என் அப்பா.
எல்லாரும் நெனைப்பாங்க தந்தையர் தினம் வந்தா தான் உங்களுக்கு உங்க அப்பாவ கண்ணுக்கு தெரியும்னு,ஆனா,எல்லாருக்கும் எல்லா நாளும் தன்ன பெத்தவங்க மேல பாசம் இருக்கும்.அத வெளியில காட்டிக்க மாட்டாங்க.அத வெளிக்காட்டுற ஒரு நாள் இது தான்..
ஆண்டவன்,கடவுள்,சாமி,தெய்வம்,இந்த வார்த்தைகளோட முழு உருவம் என் அப்பா...
இப்படி எல்லாமுமா இருக்க என் அப்பாக்கும்,உலகத்துல இருக்க எல்லாருடைய அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்..
- எழில் ஆதித்தமிழன்✍️

Super uh🤩
ReplyDelete