செல்போன் உலகில் மூழ்கும் குழந்தைகள்

செல்போன் உலகில்  மூழ்கும் குழந்தைகள்….


இந்த  காலத்து கொழந்தைங்க  செல்போனையே தங்களோட உலகம்னு நெனச்சிட்டு இருக்காங்க. புராண கதைகள்ல  சிவனோட  கையில ஒட்டிய திருவோடு மாதிரி, இன்னைக்கு  எல்லோருடைய கையிலயும்  செல்போன்கள்  ஒட்டிகிட்டு இருக்கு. இந்த 90ஸ் கிட்ஸ் 80ஸ் கிட்ஸ்னு சொல்றாங்க இல்ல,இவங்க காலத்துல எல்லாம்  நிலாவ காட்டி சோறு ஊட்டுவாங்க.ஆனா இன்னைக்கு இருக்க கால கட்டத்துல,செல்போனை காட்டி தான் சோறு ஊட்டுறாங்க. அப்படி செல்போன காட்டி சோறு ஊட்டி பழக்கப்பட்ட கொழந்தைங்க காலம் போக,போக செல்போனையே உலகம்னு நெனச்சி,செல்போன் இல்லாம இருக்க முடியாத அளவுக்கு மாறி போய்டுறாங்க.  
பெரியவங்க தான் ஒரே வீட்ல இருந்துகிட்டு வெறும் மெசேஜ் மூலமா சாப்டிய, என்ன பன்றனு கேட்டுடு இருந்தாங்க,இருக்காங்க. ஆன இப்போ கொழந்தைங்களையும் அப்படி மாத்திடாங்க . என்ன பொறுத்தவரைக்கும் பெரியவங்க தான் கொழந்தைங்க இப்படி மாறுனதுக்கு காரணம்னு சொல்லுவேன்..ஏன்னா, நம்மள பாத்துதான் கொழந்தைங்க வளருவாங்கனு சொல்லுவாங்க பெரியவங்க.அப்டி இருக்கும் போது நாமளே இப்படி செல்போனும் கையுமா இருந்தா ,கொழந்தைங்களும் அப்படி தான இருப்பாங்க,வளருவாங்க.

பெரியவங்க எப்போ கொழந்தைங்க கையில இருந்து செல்போன வாங்குறாங்கனு பாத்தோம்னா, அவங்க எக்ஸாம்ல மார்க் குறையும் போது தான்.தற்கொலைக்கு செல்போனும் காரணம்னு  உளவியல் நிபுணர் அழுத்தமாக சொல்றங்க. கொழந்தைங்க தற்கொலைக்கு செல்போனும் ஒரு காரணம்  தான்.பெற்றோர்கள் தங்களோட  வேலையை சுலபமா ஆக்க  தங்களோட கொழந்தைங்களுக்கு  செல்போனை கொடுக்குறாங்க. கொழந்தைங்க  கார்டூன் படம் பாக்குறது, செல்போனில் கேம்  விளையாடுறதுனு  அதுலையே  மூழ்கி கெடக்குறாங்க. 

பெற்றோர்கள் செல்போனை வாங்கும்போது கொழந்தைகளுக்கு கோபம் வருது. ஒரு சில, கொழந்தைங்க செல்போனுக்காக பெத்தவங்களையே  அடிக்கும் அளவுக்கு அவங்களோட  மனநிலை மாறுது. இப்போ ரீசண்டா கூடா பப்ஜி வெளாடும்போது, போன புடுங்குன பெற்றோரை அடிச்ச சம்பவம் கேள்விப்பட்டு இருப்போம் .

குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகுறாங்க,இதனாலயே வாழ்க்கைய எதிர்கொள்ள இவங்களுக்கு தைரியம் வர மாட்டீங்குது.
ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பானு  வாழ்க்கையில வெற்றி தோல்வியை கற்றுக்கொடுக்கும் விளையாட்டை உணர்த்தியிருப்பாரு கவிஞர் பாரதி. ஆனா இன்றைய கொழந்தைங்களோ செல்போனுல  விளையாடும் சூழல் தான். மறுபக்கம்  படி, படினு பெத்தவங்க தங்களோட விருப்பத்தை கொழந்தைங்க மேல திணிப்பதும் சுமையாக அமையுது. இந்த சூழலை ஜெயம்ரவி நடிச்ச கோமாளி படத்துல தெளிவா பேசி இருப்பாங்க. அதுல  ஒரு டயலாக் வரும் என்னடா பன்னி வச்சி இருக்கீங்கனு. அந்த மாதிரி நாம என்ன தான் பன்றோம் பன்னி வச்சி இருக்கோம்னு தெரியல. 

இது மட்டும் தான் கொடுமனு பாத்தா,இன்னொரு கொடும ஒன்னு இருக்குங்க,அது என்னன்னா, கொழந்தங்கள  3 வயசுலயே படி,படினு டியூஷன் அனுப்புறது,பால் வாசத்தை மறக்குறதுக்கு முன்னாடியே பள்ளிகூடத்துக்கு அனுப்புறது எல்லாம் சமூக கேடுனு ஆதங்கம் தெரிவிக்கிறாங்க கல்வியாளர்கள்.இந்த மாதிரியான சூழல் தான் கொழந்தைங்கள பக்குவம் இல்லாம பலவீனமா சோம்பேறியா ஆக்குது.இதனாலயே நெறைய கொழந்தைங்க மன அழுத்ததுக்கு ஆளாகி தற்கொலை முயற்சிக்கு எல்லாம் போறாங்க.இந்த கொரோனா வந்ததுல இருந்து சின்ன கொழந்தைங்களுக்கு கூட ஆன்லைன் எக்ஸாம் வச்சாங்க. அதுக்காகவே கொழந்தைங்களுக்கு அதிகமா போன் யூஸ் பன்ன ஆரம்பிச்சிட்டாங்க.சமீபத்துல நெறைய தற்கொலை வேற நடந்துட்டு இருக்கு .இந்த மாதிரியான சூழல பெற்றோர்கள் பொறுப்போட பாத்து நடக்கணும் .

கொழந்தைகளைப் பொறுத்தவரை, பொறந்து நாலு  மாசம் கடந்தபிறகு, அவங்களுக்கு கேட்குற திறன், பேசுற திறன்  எல்லாம் வளர்ச்சிபெறத் தொடங்குது. அந்த நேரத்தில அவங்களுக்கு டிஜிட்டல் திரைகள காட்டிட்டு வந்தா, அந்த வளர்ச்சி எல்லாம், தடைபடவும், தாமதப்படவும் வாய்ப்பிருக்குனு மருத்துவர்கள் சொல்றாங்க.

இத எல்லாம் நடக்காம இருக்க  பெற்றோர்கள் என்ன பன்னனும். இதுக்கு என்ன தான் தீர்வு.

மொபைல காட்டினா தான் என் குழந்தை சாப்பிடவே செய்றான்னு   சொல்லி பல பெற்றோர்கள் பிறந்த கொழந்தைங்களுக்கு, டிஜிட்டல் திரைகளைக் காட்டுறாங்க. சாப்பிட வைக்கிறதுக்காக, கொழந்தைக்கு  மொபைலைக் காட்டுவதை விட மோசமான ஒரு பழக்கம் இருக்கவே முடியாதுனு டாக்டர்கள் சொல்றாங்க. குழந்தை சாப்பிட அடம் பிடிச்சா, அவங்களை வெளியில கூட்டிட்டு போய் இயற்கையை வேடிக்கை காட்டுங்க. முடிஞ்சவரை, அவங்க கூட பேசிகிட்டு இருங்க. கொழந்தைங்க  மொபைலை மறக்க ஒரேவழி,பெற்றோர்கள் அவங்க கூட நேரம் செலவிடுறது தான் .

கொஞ்சம் வளர்ந்த கொழந்தையாக இருந்தா, அவங்களோட எண்ணங்கள்ல தடுமாற்றம் ஏற்படும் வாய்ப்பும் அதிகமா இருக்கும்.  காரணம், வளர்ந்த கொழந்தைகளுக்கு, எல்லாமே தெரிஞ்சிக்கனும்னு ஆர்வம் அதிகமா இருக்கும். அதனாலேயே, மொபைல்ல வீடியோக்கள் பாக்கும்போது, அடுத்து என்ன,அடுத்து என்ன அப்டிங்கிறதுல,  அதிக கவனமாக இருப்பாங்க. இது, தான் சின்ன வயசுலையே அடல்ட் வீடியோ பாக்கும் பழக்கத்துக்கு அவங்களை உட்படுத்துது. கொழந்தைங்க கிட்ட போன் குடுக்குறதுனால,அவங்க மனரீதியாகவோ,உடல்ரீதியாகவோ நெறைய பாதிக்கப்படுறாங்க. இது சம்பந்தமா நெறைய படம் வந்தாலும் சரி, நெறைய படிச்சாலும் சரி, நாம இத எல்லாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்க மாட்றோம்.இனிமேலாச்சும் இதோட ஆபத்தை உணர்ந்து ரொம்ப கவனமா செயல்படனும்.

இயந்திரத்தோடு நேரம் செலவிடுவதை தவிர்த்துவிட்டு,

இயற்கையோடு செலவிடுவோம்!

                ✍️-எழில்ஆதித்தமிழன் 

Comments

Post a Comment