உயிரைப்பறித்த செல்போன்
உயிரைப்பறித்த செல்போன்…
உத்திரபிரதேசம் அருகே செல்போன் வெடித்து 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
அத்தியாவசியம், விஞ்ஞானம், ஆடம்பரம்னு நாம ஒவ்வொரு நாளும் எமனோட தான் வாழ்ந்துட்டு இருக்கோம்..
காரணம், ஆறாம் விரலாய் பேனா கேட்ட காலம் போய் மொத்த விரலும் செல்போனால் வீணாய் போன காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் . அத்தியாவசிய உபயோகத்திற்கு பயன்படுத்தாமல் செல்லும் இடமெல்லாம் செல்போனும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறோம் . அந்த அளவிற்கு செல்போனின் பயன்பாடுகள் அவரவர் தேவைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செல்போனிற்கு சார்ஜர் போடும் நிலை ஏற்படுகிறது.
சமீபகாலமா செல்போன்கள் வெடிக்கும் நிகழ்வு நாட்டின் பல்வேறு பகுதிகள்ல அடிக்கடி நடந்துட்டு வருது. மேலும், இந்த சம்பவங்களில் காயங்கள் ஏற்படுவதோட நிக்காம சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுது.
சாதாரண செல்போன்கள்னு நாம நினைக்கிறது பல நேரங்களில் நமக்கும், நமலோட குடும்பத்துக்கும் பெரிய ஆபத்தா மாறிடுது. அப்படியொரு சம்பவம் தான் உத்தரபிரதேசத்தில நடந்து இருக்கு.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் சுனில் குமார் காஷ்யப். கூலித் தொழிலாளியான இவருக்கு குஷம் என்ற மனைவியும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றன. இதில இரண்டாவது பெண் குழந்தைக்கு 8 மாதமே ஆகியிருந்தது.நேற்று சுனில்குமார் மதிய உணவு சாப்பிட்டுட்டு வேலைக்கு போய் இருந்தாரு. பின்னர் குஷமும் தனது பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்துட்டு அவங்களை ஒரு அறையில் தூங்க வைத்தார். அப்போது தனது ஸ்மார்ட்போனை சார்ஜ் போட்டு இருக்காரு . அந்த செல்போனுக்கு பக்கத்தில் தான் அவர்களோட இரண்டாவது குழந்தையும் தூங்கிட்டு இருந்து இருக்காங்க.குஷம் வெளியே துணிகளை காயப்போட்டு கொண்டிருந்த போது, வீட்டுக்குள் பயங்கர வெடி சத்தம் கேட்டு இருக்கு . இதையடுத்து, அவர் வேகமாக வந்து பார்த்த போது, 8 மாதக் குழந்தை உடல் முழுவதும் தீக்காயம் பட்டு அலறிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக கூறினர். இதையடுத்து, குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து,குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், தெரியாமல் நடந்த விபத்தில்தான் குழந்தை உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
பொதுவாக, செல்போன்கள் வெடிக்கும் பொருள் கிடையாது. அதில இருக்கும் பேட்டரிதான் வெடிக்க்ககூடிய பொருள் ஆகும். எனவே பேட்டரியை முறையாக பராமரிச்சாலே செல்போன் வெடிப்பை தவிர்க்கலாம். நாம் செல்போன் வாங்கும் போது அதனுடன் சார்ஜரும் வழங்கப்படும். குறிப்பிட்ட செல்போனில் இருக்கும் பேட்டரியின் திறனுக்கு ஏற்ற சார்ஜர் அதுதான். அந்த ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தும் போது பேட்டரியின் வெப்பநிலை சீராக இருக்கும். ஆனால், குறைந்த திறன் கொண்ட பேட்டரிக்கு அதிக திறன் கொண்ட சார்ஜரை பயன்படுத்தும் போது சமநிலையற்ற வெப்பநிலை ஏற்பட்டு பேட்டரி வெடிக்கிறது.
அதேபோல, சார்ஜ் போட்டு பேசுவதும் ஆபத்தானதுதான். சார்ஜ் போட்டு பேசும் போது செல்போனுக்கு அதிக சிக்னல்கள் தேவைப்படுது. எக்காரணத்தைக் கொண்டும் செல்போன்களை படுக்கையில் சார்ஜ் போட்டு விட்டு தூங்க செல்லக்கூடாதுனு அறிவியல் வல்லுநர்கள் சொல்றாங்க.. செல்போன்களில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே சார்ஜ் போடனும்னும் சொல்றாங்க. அப்போது சார்ஜ் போட்டிருக்கும் பட்சத்தில செல்போனுக்கு பாயும் வோல்ட் அளவில் நிலையற்ற தன்மை ஏற்படுது. இதுவும் பேட்டரியின் வெப்பநிலையை அதிகரித்து வெடிக்கச் செய்துவிடும். இதுபோல், நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளை தவிர்த்தாலே செல்போன் வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
✍️எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment