கருக்கு புத்தக விமர்சனம்
புத்தகத்தின் பெயர் : கருக்கு
ஆசிரியர் : பாமா
என் கதை உன் கதை உங்கள் கதை என்னும் பாணியிலே தன் பிறப்பு வளர்ப்பு வாழ்ந்த விதம் இவை பற்றி கூறுவதன் வழி தனது தலித் தினத்தின் வரலாற்றையே படம் பிடித்து காட்டுகிறார் என்னுள் ஆசிரியர் சமுதாயமும் சமயமும் சாதி வெறி வளர்த்து சொல்லாத கொடுமைகளை சாதித்து வந்தது உண்மை என்றாலும் அதன் மத்தியிலும் உயிரோட்டத்தோடு தன்மான உணர்வோடு இணை எழுச்சியோடு தலைநிமிர்ந்து நின்று எதிர்நீச்சல் போடுவோம் என்ற உள்ளத்து உறுதியை இந்நூலின் ஒவ்வொரு ஏட்டிலும் குதித்து எழுகிறது.தலித் மக்களுக்கு தமிழக கத்தோலிக்க திருச்சபையில் இழக்கப்பட்டு வரும் அநீதிகளை கண்டு குமுறும் நாம் அவற்றின் வரலாற்றுப் பின்னணியை சிறிது அறிவதற்கு என்னுள் துணை நிற்கும் ஜீவநதி என்று தொடரில் முதல் உற்றாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் கருத்து என்ற நூல் வெளியிடப்பட்டது.
பாமா எழுதிய கருத்து என்ற புத்தகத்தை படித்தேன்.மக்களின் பேச்சு வழக்கில் தலித் மக்களின் வாழ்க்கையை தனது அனுபவ அடிப்படையில் மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்.வாசித்த பொழுது முதல் பார்வையில் ஒரு கிராமத்தின் வரலாற்றை வெளிப்படுத்தும் சரித்திர நூல் போல் இருந்தது.மற்றொரு கோணத்தில் படிக்கும் பொழுது தனது அனுபவத்தை வெளியிடும் ஒரு சுயசரிதை போல இருந்தது.பிரிதொரு கோணத்தில் ஆழ்ந்து படித்த பொழுது ஒரு தலை சிறந்த நாவலாக தோன்றியது.
இவ்வாறு சரித்திரம், சுய சரிதை,நாவல் என்ற மூன்று வெவ்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு புதுவிதமான புத்தகத்தை படைத்திருக்கிறார்கள்.மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி இது. பாமா தனது அனுபவம் என்னும் ஊஞ்சலில் அமர்ந்து ஊஞ்சலாடியபடியே முன்னும் பின்னும் சென்று தனது வாழ்க்கையை தீண்டாமை,சாதி சண்டை, உழைப்பு,படிப்பு,ஓய்வு,பக்தி போன்ற பல கோணங்களில் ஆழ்ந்து பார்த்து ஒரு இலக்கியமாக படைத்திருக்கிறார்கள்.
அனுபவத்தின் அடிப்படையில் பிறக்கும் படைப்பே சிறந்த படைப்பு என்பதற்கு இந்நூல் சிறந்த எடுத்துக்காட்டு.
ஒரு சரித்திர வளர்ச்சியாகவே அனைத்து படைப்புகளையும் பார்த்து, படித்து, ரசித்து பழக்கப்படுத்திக் கொண்ட நாம் இப் புத்தகத்தை படிக்கும் போது சரியாக புரிந்து கொள்ளாமல் தவிக்கிறோம்.பாமா ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் திரும்பி வரும் பொழுது புதிய கோணத்தில் தனது அனுபவத்தை பார்க்கிறார்கள்.நாம் வழக்கமாக பழக்கப்படுத்திக் கொண்ட முறைக்கு மாறான முறையில் தனது படைப்பை இவர்கள் உருவாக்கி இருக்கிறார் என்று உணர்ந்து படிக்கும் பொழுது படைப்பை முழுவதுமாக அனுபவிக்க முடிகிறது.
பாதிக்கப்படுபவன் படைப்பாளியாக மாறும் போது அவனிடமிருந்து பிறக்கும் படைப்பு புதுமையானதாகவும் புரட்சியானதாகவும் தானே இருக்கும்..
அத்தகைய புதுமையையும் புரட்சியையும் இங்கே காண்கிறோம். வெறும் இலக்கிய ரசனைக்காக மட்டும் படைக்கப்பட்ட இலக்கியம் அல்ல இது. மாறாக பாதிக்கப்பட்ட தலித் மக்களின் ரணங்களை,வேதனைகளை கொடுமைகளை உணர்ந்து அதை போக்க தலித் மக்கள் சார்பாக ஒரு நிலைப்பாடு எடுக்கத் தூண்டும் படைப்பு.நிலைப்பாடு எடுப்பதோடு மட்டுமின்றி விடாமல் அதீத மனித அமைப்புகளை எதிர்க்க ஆக்கப்பூர்வமான செயல்பட தூண்ட படைத்தது.இலக்கிய விமர்சனங்களின் பார்வையில் இந்த புத்தகம் ஒரு நீண்ட வாதத்தை தோற்று இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.இந்நூல் இவர்களின் முதல் படைப்பு.
தலை சிறந்த எழுத்தாளர்களிடம் காணப்படும் ஒரு அனுபவம் முதிர்ச்சியை இதில் பார்க்கிறோம்.சிறு சிறு நிகழ்ச்சியை கூட எவ்வளவு ஆழ்ந்து பார்த்து விவரித்து எழுதி இருக்கிறார்கள் என்று உணர்ந்த வியக்கிறேன்.
கருக்கு வெளிவந்து 25 ஆண்டுகளான போது அதற்கு பல்வேறு இடங்களில் வெள்ளி விழா கொண்டாடி பலர் அதை பற்றி பேசினார்கள். ஒரு புத்தகம் வெள்ளி விழா கொண்டாட இன்னும் உயிர்ப்புடன் இருப்பது மகிழ்வை தருகிறது. இடைப்பட்ட இந்த ஆண்டுகளில் கருத்தின் பயணம் விசாலமானது. பல கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் கருக்கினை விளிம்பு நிலை இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம், தலித் இலக்கியம், தன் வரலாற்று பதிவு பின்னிய இலக்கியம் என வகைப்படுத்தி மாணவர்களுக்கு அதை பாடமாக பாடப் புத்தகமாக ஆக்கியுள்ளனர்.
தங்களது ஆய்வுக்கான இலக்கியமாக பல்வேறு தலைப்புகளில் நம் நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழக மாணாக்கர்கள் கருக்கை பயன்படுத்தி உள்ளனர்.
தலித் தலித் மக்களின் வரலாறு வற்றாத ஒரு ஜீவநதி பலகோடி மக்களின் கண்ணீர் வியர்வை மற்றும் குருதியிலே பிறப்பெடுத்து உழைப்புக்கும் உயர்வுக்கும் சான்றாக அமைந்து ஒரு இனத்தின் ஏக்கத்தையும் எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் எழுச்சிகளையும் தாங்கி,ஒரு அருங்கொடையை தனது மக்களுக்கு அளித்த பாமா அவர்களை உளமாற வாழ்த்து பாராட்டுகிறேன்.
மேலும்,தமிழக கிறிஸ்துவ தலித் மக்களின் மத்தியில் முடங்கி கிடக்கின்ற மனித சக்தியை மன எழுச்சியை உயிர்ப்புத் திறனை தலித் மக்களின் ஒரு சிலது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் வெளி உணர வேண்டும் அதை வாசித்து தலித் மக்கள் எழுச்சி பெற வேண்டும் பயந்து பதுங்கி ஒதுங்கி ஒதுங்கி நிற்கின்ற நிலையை விட்டு வெளியேறி புரட்சிப் புயலாக மாற வேண்டும் என்பதே இந்நூலின் குறிக்கோள்..
✍️-எழில்ஆதித்தமிழன்

Comments
Post a Comment