ஆகாயத் தாமரை
புத்தகத்தின் பெயர்: ஆகாயத் தாமரை
ஆசிரியர்: அசோகமித்திரன்
ரகுநாதன் என்னும் இளைஞனனோட வாழ்க்கையில ஒவ்வொரு நாள்ல நடக்கும் சில விசயங்கள் ஆகாயத்தாமரையா விரியுது. இயல்பான சில நிகழ்வுகளும் வியப்புக்குரிய தற்செயல் நிகழ்வுகள், இப்படி எல்லாம் சேர்ந்து ரகுநாதனோட வாழ்க்கையை அலைக்கழிக்குது.
ரகுநாதனோட வாழ்க்கையில் ஒரு சில நாள் அவனோட ஒட்டுமொத்த வாழ்க்கையின் போக்கை தீர்மானிப்பதோடு இல்லாம மொத்த வாழ்க்கையாவே சுவாரசியமா மாத்துது இந்த நாவல். அவனை மாதிரி நகர்ப்புற நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையில பல்வேறு மாதிரியா அவங்களோட வாழ்க்கை போக்கினை உணர்த்தும் குறியீடாவே இருக்குது. புறக்காட்சிகள், மன உணர்வுகள் நடத்தைகள் இதோடவே, நுணுக்கமான சித்தரிப்புகள வச்சி அசோக மித்திரன் ரகுநாதனின் கதையை சொல்றாரு..
அவனுடைய செயல்களை, உணர்வுகளை அவனை பாதிக்கும் நிகழ்வுகளை, மனிதர்களை, அவன் சிக்கிக் கொள்ளும் நெருக்கடிகளோட தன்மைகளை, அவனுக்கு கிடைக்கும் எதிர்பாராத உதவிகளை, அத அவன் எதிர்கொள்ளும் விதங்களை இப்படி ஒவ்வொரு விசயத்தையும் அசோகமித்திரன் ரொம்ப நுணுக்கமா சொல்றாரு. இந்த சித்தரிப்புகள்ல குடும்ப உறவுகள், சமூக உறவுகள்,பொருளாதார படிநிலைகள், ஆண் பெண் உறவுகள், அலுவலக நடைமுறைகள்னு பல அம்சங்கள் வெளிப்படுது. படிச்சிட்டு இருக்கும் போது எழுத்து எல்லாம் மறைஞ்சி போய், நம்ம நினைவுல காட்சிகளா ஓடும்.. காது பக்கத்துல யாரோ ஒருத்தர் மெதுவா பேசுற மாதிரி உணர்வை இந்த நாவல் நமக்கு தருது.
ஆகாயத்தாமரை எனும் கற்பனையை மானுட கனவுகளோட குறியீடாக உருவாகி இருக்கக்கூடிய இந்த நாவல், ஒரு மனிதனோட வாழ்வின் எதார்த்தத்தை காட்டுது...
-எழில்ஆதித்தமிழன்

Comments
Post a Comment