மனுசங்க

புத்தகத்தின் பெயர் : மனுசங்க

ஆசியர்  : கி.ராஜநாராயணன்


கி.ராவோட மொழி ஆட்சி எவ்ளோ காலம் பின்னாடி போனாலும் நின்னு கணக்கு பார்க்கும். இவரோட படைப்புகள்ல, கதாபாத்திரங்கள்ல, மொழியில, கிராமத்து வாழ்வியல்ல,மரபில,சடங்குகள்ல நிறைய ஆய்வுகள் பண்ணியிருக்கலாம்.

அப்படி ஒரு படைப்ப கி.ரா படைச்சி இருப்பாரு. இந்த புத்தகத்தோட பேர படிச்சதும் எப்படியும் இது சாதி பத்தி தான் பேசும்,அத பத்தி தான் இதுல எழுதியிப்பாங்கனு நெனச்சி தான் படிக்க தொடங்குனேன். ஆனா, நா நெனச்சது பொய்யா போச்சு.

மனுசங்க அப்டிங்கிறது,அந்த காலத்துல இருக்க மனுசங்க எப்படி வாழ்ந்தாங்க,அவங்களோட பழக்க வழக்கம் எப்படி இருந்துச்சி,அவங்களோட உணவு பழக்கம் என்னவா இருந்துச்சினு பேசக்கூடிய ஒரு புத்தகமா இருக்கு.
இந்த புத்தகத்துல ஒவ்வொரு மனுசங்கள பத்தியும் ரொம்ப தெளிவா பேசப்பட்டு இருக்கு.ஒவ்வொருத்தரோட கேரக்டர எளிமையா சொல்லி இருக்காரு ஆசிரியர்.

இதுமட்டும் இல்லாம சாதி அந்த காலத்துல எப்படி இருந்துச்சினும் சொல்லியிருக்கு.உதாரணமா, அந்த காலத்துல மனுசப் பெயர்களில் சாதி ஒட்டி இருக்கும்.ஆனா,புஞ்சைகளில் மட்டும் சாதிப் பெயர் மட்டுமே ஒட்டி இருக்கும்னு ரொம்ப தெளிவா சொல்லியிருக்கு.

இதுமட்டும் இல்லாம சாதி அந்த காலத்துல எப்படி இருந்துச்சினும் சொல்லியிருக்கு.உதாரணமா, அந்த காலத்துல மனுசப் பெயர்களில் சாதி ஒட்டி இருக்கும்.ஆனா,புஞ்சைகளில் மட்டும் சாதிப் பெயர் மட்டுமே ஒட்டி இருக்கும்னு ரொம்ப தெளிவா சொல்லியிருக்கு.
”காத்தடிக்கிது தாழை பூக்குது” இப்படி பல சொலவடைகளும்,பழமொழிகளும் இந்த புத்தகத்துல அந்தந்த மனுசங்களுக்கு ஏத்த மாதிரி சொல்லி இருப்பாரு ஆசிரியர்…

அத்தேமக சங்கர வடிவெ
கட்டத்தாம் வேணும்
குச்சலுக்குள்ளே கோரம்பாயே விரிக்கத்தாம் வேணும் கொறட்டுக்கம்பு வேடிக்கேயே பாக்கத்தேம் வேணும் வேணும் ...”

ஆறரை ரூபா பரிசந்தெயும்
போடத்தா வேணும்

பாக்கத்தேம் வேணும்வேணும்…”மொத்தத்துல இந்த புத்தகம் அந்த காலத்துல இருக்ககூடிய அழகான விசயங்களையும்,நினைவுகளையும் நாம படிக்கும் போது நம்ம மனசுல ஆழமான காட்சிகளா பதியும்.....

                             -எழில்ஆதித்தமிழன்

Comments