சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?

புத்தகத்தின் பெயர்:

சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?

ஆசிரியர்  : மருதன்




அர்ஜென்டினாவில் தொடங்கி சிலி,பெரு, வெனிசுலா,பொலிவியா என லத்தின் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ, ஆல்பர்ட் இரண்டு பேரும் தங்களுடைய மோட்டார் வாகனத்தில் பயணங்களை மேற்கொள்றாங்க. இந்த பயணங்கள் தான் எர்னஸ்டோ என்கிற சேகுவேரா புரட்சியாளரா மாறுராருனு இந்த புத்தகம் சொல்லுது. இதுதான் இந்த புத்தகத்தினுடைய கரு.

இந்த புத்தகத்தில் என்னென்ன சொல்லி இருக்காங்க அப்படின்னா,காதல்,  பயணம் மேற்கொள்ற இடத்துல இருக்க பிரச்சனைகள் அங்கிருக்க மக்களோட வாழ்வியல்கள் இது எல்லாமே மிக தெளிவா சேகுவேரா தன்னுடைய டைரி குறிப்பில் பதிவிடுகிறாரு. அந்த டைரி குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டது தான் இந்த புத்தகம்.

பயணம் ஒரு மனுஷனுக்கு எவ்வளவு முக்கியம் அந்த பயணம் அந்த மனுஷனை எப்படி எல்லாம் மாத்தும் எப்படி எல்லாம் அந்த பயணத்தை நாம் அனுபவிக்கனும்னு  இந்த  புத்தகத்தில  சொல்லி இருக்காரு. வீட்டிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி போறோமோ அந்த அளவுக்கு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் அப்படின்னு இந்த புத்தகத்துல சேகுவாரா சொல்லி இருக்கிறார்.

நம்ம பயணம் செய்கிறோம் அப்படின்னா  எந்த நோக்கத்துக்காக நீங்க பயணம் பன்றீங்கனு கேப்பாங்க அந்த கேள்விக்கு சே ஒரு அழகான பதில சொல்லுவாரு..
ஆர்வமும் துடிப்பும் போதாதா பயணத்துக்கு வேற என்ன நோக்கம் இருக்கனும்னு சொல்லுவாரு..

சேவுக்கு நிறைய ஊர்களில் பயணம் செய்யும்போதுதான் அங்க வர்க்கத்தால மக்கள் எந்த அளவுக்கு அடக்கப்பட்டு இருக்காங்க ஒடுக்கப்பட்டிருக்காங்கன்னு தெரிய வருது. இந்த மக்களிடையே ஒரு சோசலிசம் கிடையாது.ஆனால், அங்க இருக்க கம்யூனிஸ்ட் கட்சி காரங்க எல்லோருமே இந்த வர்க்க போராட்டத்துக்காக போராடுறாங்க.ஆனா தீவிரமா போராட்டத்தை முன்வைக்க மாட்டாங்கன்னு சே  புரிஞ்சுக்கிறார்.

சேகுவேராவை பற்றி பிடல் காஸ்ட்ரோ ஒன்னு சொல்றாரு...
சேகுவேராக்கு மனுஷங்க மேல நம்பிக்கை அதிகமா இருந்துச்சு.  சேகுவாரா மனிதர்களை புரிந்து கொண்டதற்கும் நம்பியதற்கும் மோட்டார் சைக்கிள் பயணம் வழி வகுத்து கொடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படின்னு சே பத்தி கேஸ்ட்ரோ சொல்றாரு


சேகுவேரா பொருத்தவரை அவர் வாழ்க்கை தொடர் பயணங்களால நிரம்பி இருக்கு. மக்கள் கிட்ட அவர் போய் சேர்ந்துக்கிட்டே இருந்தாரு. சேகுவேரா எழுதியது போலவே அவர் கண் முன்னால மனிதகுலம் ரெண்டாக்கப்பட்டுச்சு. எந்த பக்கம் சாயுறது என்னும் பேச்சுக்கே இடமில்லாத வகையில் சேகுவேரா மக்களிடம் தான் சேர்ந்தார். புதிய ஆற்றலோடும் புதிய நம்பிக்கையோடும் வெற்றி பெற துடிக்கும் பாட்டாளி வர்க்கத்தின் எக்கால ஓசை கேட்கும் புனித பூமியின் பகுதியா சேகுவேராவை மாத்திகிட்டார்..


சேகுவேராவ சில பேரு இவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர் அப்படின்னு சொல்லுவாங்க. ஆனால் இந்த புத்தகத்தில் என்ன கொடுத்திருக்காங்க அப்படின்னா, அர்ஜென்டினாவில கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்படி இயங்கி வந்துச்சி. தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள்ல அந்த கட்சிசெல்வாக்கு பெறல. சக்தி வாய்ந்த தலைமை இல்ல.சித்தாந்தம்,தத்துவம்னு பேசினார்களே ஒழிய கண்முன்னால் மாற்றங்களை செயல் வடிவில் அமல்படுத்த வேண்டும் என்று துடிப்பு இல்ல. சேகுவேரா கம்யூனிஸ்ட் கட்சி மீது ஆர்வம் செலுத்தாதற்கு இதுவே காரணமா இருக்கணும்னு சொல்றாரு ஜான் லீ ஆண்டர்சன்.


சிலி,பெரு,கொலம்பியா,வெனிசுலா என்று அனைத்து பகுதிகளிலும் இருக்க மக்கள் கூட்டம் அமெரிக்காவில் ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்டிருந்தது. சேகுவேரா கவனிக்க தவறியதில்லை. இதனாலயும் சேகுவேரா புரட்சியாளராக ஆனதற்கு காரணம்னு இந்த புத்தகத்தை சொல்றாங்க.


எல்லா நாட்டுல இருக்கிற அடக்கு முறையையும் ஒடுக்கு முறையும் தெரிஞ்சுக்கிட்டு வந்த சேகுவேரா தன்னோட அர்ஜென்டினா நாட்டுல இருக்க அடக்கு முறையை பற்றி தெரியாமலே போயிட்டாரு. அங்க இருக்க அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் பத்தி தெரிஞ்சதால தான் நிறைய போராட்டங்களையும் கையில எடுக்கிறார். அப்போதான் மெக்சிகோவில் பிடல் காஸ்ட்ரோவை சேகுவேரா சந்திக்கிறார். ரெண்டு பேரும் தீவிரமா பேசுறாங்க. நண்பர்களாக கியூபா புரட்சிக்கு கியூபா விடுதலைக்கு சேகுவேரா ரொம்பவே பாடுபட்டார். கடைசியா கியூபா விடுதலை அடைஞ்சிருச்சு. இதுக்கு மேலும் எனக்கு எங்க வேலை இல்ல.நான் எங்கெல்லாம் என் நாடு அடிமைப்பட்டு இருக்கோ அங்கெல்லாம் அந்த நாட்டை விடுதலைக்கு பெற வழி வகுக்க வேண்டும் அப்படின்னு சொல்லிட்டு அங்க இருந்து கிளம்புறாரு சேகுவேரா.


சேகுவேரா என்னும் புரட்சியாளராக எர்னஸ்டோ உருவானது காரணம் அவரது மோட்டார் சைக்கிள் பயணமா என்னும் கேள்வியை எழுப்பி சிலர் விடை காண முயற்சி செய்றாங்க. மோட்டார் சைக்கிள் பயணமே சேகுவேரா ஒரு மார்க்சிஸ்ட்டாக மாற்றியது என்பது சிலருடைய வாதம். அப்படி சொல்ல முடியாது .ஆனால் மோட்டார் சைக்கிள் பயணம் அவர் மார்க்சிஸ்டாக மாறியதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அப்படின்னு சொல்றாங்க சோசலிசம் குறித்து இவ்வளவு ஆர்வம் இருந்த போதும் முறைப்படி இடதுசாரி இயக்கம் எதிலையும் சேகுவேரா இணையல..

மொத்தத்துல சேகுவாரா எப்படி புரட்சியாளராக மாறினார் அப்படிங்குறத அவருடைய மோட்டார் சைக்கிள் பயணத்தை பற்றி படிச்சாலே நமக்கு தெரிஞ்சிடும். அர்ஜென்டினாவுல தொடங்கி சிலி,பெரு,வெனிசுலா, பொலிவியா என்ற அமெரிக்க நாடுகளிடையே சேகுவாரா மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரி குறிப்புகளாக வெளிவந்து இருக்கு. தனித்துவமிக்க இந்த புத்தகத்தில் சேகுவேரா தனது அனுபவங்களையும் தரிசித்த நாடுகளின் அரசியல் சமூக வரலாற்று பின்புலத்தையும் பதிவு செஞ்சிருக்காரு. இந்த பயணம் சேகுவேரா உலகின் முதன்மையான புரட்சியாளராக  மாத்தி இருக்கு. ஒரு தேர்ந்த மார்க்சிஸ்ட் ஆகவும் தீரமிக்க போராளியாகவும் வளர்த்தெடுத்திருக்கு. மக்களை நேசித்து மக்களுக்காக வாழ்ந்து மக்களுக்காக உயிர் துறக்கவும் நெஞ்சுறத்தையும் மாண்பையும் பெற்று தந்தது. எர்னஸ்டோ என்னும் சாமானியன சேகுவேராவாக உருவாக்கி இருக்கு சேகுவேராவின் இந்த பயணங்கள்..


                                 - எழில்ஆதித்தமிழன் 

Comments