கிழவனும் கடலும்

புத்தகத்தின் பெயர்: கிழவனும் கடலும் 
ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே 


ரொம்ப நாளா இந்த புத்தகத்தை பத்தி நெறைய பேர்நெறைய பேசி கேட்டு இருக்கேன். ஆனா, எனக்கு தான் படிக்க நேரமோ,புத்தகமோ அந்த சூழ்நிலையில கெடைக்கல. ரொம்ப நாளா படிக்க நெனச்சிட்டு இருந்த கிழவனும் கடலும் புத்தகத்தை படிக்கிறதுக்கு இன்னைக்கு தான் நேரம் கெடச்சது. 
புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின்” தி ஓல்ட் மேன் அண்ட் தி சீ (The old man and the sea by Ernest Hemingway)  புத்தகத்தை  தமிழில் எம்.எஸ் மொழிபெயர்த்திருக்கிறாரு. 

ஒரு கிழவனுக்கும் அவனோட  தூண்டில்ல அகப்படும் ராட்சத மீனுக்கும் இடையேயான போராட்டம்  தான் இந்த கதை. முழுக்க முழுக்க இது  கடல்ல நடக்குறதால வாசிக்கிறவங்களும் கடல்ல ஒரு பெரிய பயணம் போன மாதிரி உணர்வு உண்டாக்குது இந்த புத்தகம்.

பல நாளா கடலுக்கு போய் வெறும் கையோடு திரும்புற கிழவனுக்கு ஆறுதலாய் ஒரு சின்ன பையன் இருக்கான். முதல்ல அந்த பையன் இந்த கிழவனோட தான் கடலுக்கு போய் மீன் பிடிச்சுட்டு வருவான். நாள் ஆக ஆக அந்த கிழவனுக்கு மீன் கெடைக்கல. அதனால, பையன் வீட்ல அந்த கிழவனோட போகாதா அவனுக்கு ராசியே இல்லனு சொல்லி தடுப்பாங்க. ஆனா, அந்த பையனுக்கு  கிழவனோட போறது தான் பிடிச்சி இருக்கு. காரணம்,அந்த கிழவனுக்கு கடல பத்தி முழுசா தெரியும். அப்போல  இருந்து கிழவன் தனியா போக ஆரம்பிக்கிறான், அந்த பையன் நானும் வரேன் வரேன்னு சொன்னாலும்,வேண்டாம்னு சொல்லி தடுத்துடுவான் அந்த கிழவன். இதுல இருந்து தான் இந்த கதை ஆரம்பிக்குது.


நடுக்கடல்ல தூண்டில் போட்டு மீனுக்காக காத்திட்டு இருக்கும் போது, ஏதோ ஒரு பெரிய மீன் மாட்டிக்குது. அதுக்கு அப்புறம் இரண்டு நாளா தனி ஒரு மனுஷனா அந்த மீன் கூட போராடி, அதை கொன்னு படகோட சேர்த்து கட்டிக்கிட்டு கரை திரும்பும் போது, வழியில அந்த மீனை சாப்பிட சுறாக்கள் படையெடுத்து வரும். மறுபடியும் அந்த சுறாக்கள் கிட்ட இருந்து இந்த மீனை எப்படியாச்சும் பாதுகாக்கனும்னு இன்னொரு போர் தொடங்குது. அந்த கிழவன் வச்சிட்டு இருக்க ஈட்டியால சுறாக்களை கொன்னதும் ,அதுக்கு அப்புறம் சுறா அந்த ஈட்டியோட தண்ணீல மூழ்கிடும். கையில இருக்க ஒரே ஆயுதமும் இப்படி போய்டுச்சேனு கிழவன் கவல படுறான். அதுக்கு அப்புறம் தன் கிட்ட இருக்க கத்திய வச்சி, தாக்க வரும் சுறாக்கள் கூடா போராடுறாரு. இதுல இருந்து என்ன தெரியுதுனா “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்ற பழமொழிக்கு ஏத்த மாதிரி தன் கிட்ட பொருள வச்சி கிழவன் வீரத்தோடா போராடுறாரு.
கிழவன் அடிக்கடி ”அந்த சிறுவன் இருந்தால் நன்றாய் இருந்திருக்குமே”னு தனியா பொலம்பிட்டு இருக்காரு.  தூண்டில இடது கையால பிடிச்சிட்டு இருக்கும் போது கை மரத்து போகுது, அப்படி இருந்து விடாமுயற்சியோட இருந்தாரு அந்த கிழவன்.
இரண்டு நாளா கடல்ல சாப்பாடு இல்லாம, அங்க இருக்க சின்ன சின்ன மீனை பிடிச்சு பச்சையா சாப்டுறது, சோர்ந்து போறப்போ எல்லாம்,என்னால முடியும் எத்தனை முறை வெற்றி பெற்று இருக்கேன்னு தனக்குத்தானே தைரியமூட்டிக்கிறது எல்லாம் அந்த கிழவன் மேல ஒரு ஈர்ப்பை உருவாக்குது.


நடுக்கடல்ல மீன் கூட நடக்கும்  பலமணி நேர போராட்டத்திற்கு நடுவில, தான் ஊருல நடக்குற பேஸ்பால் போட்டியல யார் வின் பண்ணி இருப்பானு நெனைக்கிறதும், தன்னுடைய  மன கவர்ந்த பேஸ்பால் வீரர் டிமாகியோ கால் ஆணியால் அவதிப்படுறத யோசிக்கிறதும்,கிழவனுக்கு பேஸ்பால் மேல இருக்க அந்த ஆர்வத்த இந்த புத்தகம் காட்டுது. 

”தோல்விக்காக மனிதன் படைக்கல,”ஒரு மனிதனை அழிக்க முடியும் ,தோற்கடிக்க முடியாது”னு கிழவன் சொல்றது நமக்கு தன்னம்பிக்கைய கொடுக்குது. அயல்நாட்டு இலக்கியத்தோட  நடையையும்,அந்த கடலோர மீனவர்களோட வலியையும் கதை முடியும் போது உணர முடியுது. இது நாவலா சிறுகதையா அப்படிங்கிற  குழப்பத்தை கிழவனும்,சிறுவனும்,மீனும் மறக்க வச்சிடுறாங்க. 
நாம எல்லாரும் இந்த சாண்டியாகோ கிழவன போல வாழ்க்கையில தனிச்சு விடப்பட்டிருப்போம்.ரொம்ப சிக்கலான சூழ்நிலையில யாராவது நமக்கு உதவி பண்ண மாட்டாங்கலா,நம்ம கஷ்டத்த காது கொடுத்து கேக்க மாட்டங்களானு ஏங்கி இருப்போம்,இருக்கோம்.நம்மலோட திறமைய நிரூபிக்க அந்த மீனை சாப்பிட வரும் பெரிய பெரிய சுறாக்கள் கூட மோதியிருப்போம். அப்போ நாம காட்டிய அசாதாரண துணிச்சல் நாமலே எதிர்பாத்து இருக்க மாட்டோம். அந்த வினாடி தான் மறுபடியும் ஒருமுறை நம்மள வாழ வைக்கிது இந்த கிழவனும் கடலும் போல. இந்த புத்தகத்தை படிச்சு முடிச்ச அப்பறம் ஒவ்வொரு வாசகர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியும்,தன்னம்பிக்கையும் ஏற்படுத்துது. 
                                                                                             -எழில் ஆதித்தமிழன்

Comments