"கிடை"
புத்தகத்தின் பெயர்: கிடை
ஆசிரியர்: கி.ராஜநாராயணன்
ராஐநாராயணனோட குறுநாவல்கள்ல கிடை முக்கியமான நாவல். ஆடுகளுடனான அழகிய உலகையும் அந்த மக்களின் வாழ்வியலையும் மையமாக வச்சி தான் கிடை நாவல் தொடங்குது. ஆடுகளுக்கு அவர்கள் வைக்கும் சாதி அடிப்படையிலான பெயர்கள் ஒரு புறமும், ஆட்டுப்பாலின் மகத்துவம், ஆடு மேய்ப்பவர்களின் வழக்கங்கள் என அனைத்தையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறாரு ஆசிரியர்.
இந்த நாவல மேலோட்டமா பாக்குறதுக்கு ஆடுகளையும், அத மேய்க்கும் ஆட்களையும் பத்தி வர கதையாக தெரியலாம். ஆனால், இத ஆழமா படிச்சா கீழ்ச்சாதிக்கும், மேல் சாதிக்கும் இடையே பலிக்கிடாவாக ஆக்கப்படுவோர்களின் பிரதிபலிப்பே இந்த நாவல்.
சாதாரண கதையாய் தொடங்கி, துப்பறியும் கதைக்களமாய் மாற்றி விறுவிறுப்பைத் தந்து இருக்கு. ஒரு நேரத்துல காதல் கதை தான் அப்டின்னு நினைக்கும் போது. அடுத்த ரெண்டு பக்கங்கள்ல சாதிய ஆதிக்கம், பொருளாதார அடிப்படையிலான ஏய்ப்பு, எளியவர்களுக்கெதிரான கூட்டுச் சதி, முறிக்கப் படும் காதல் என அத்தனையயும் இந்த புத்தகத்துல காட்டி இருக்காரு.
ராக்கம்மாவின் தோட்டத்தில இருந்த பருத்தியை ஆடுகள் சாப்டுது. அந்த அழிமானத்துக்குக் காரணம் யாரெனக் கண்டறிய திம்மய நாயக்கர் கூடா மூனு பேர் பருத்திக் காட்டுக்குள் போறாங்க. அங்கே ஒரு உடைந்த வளையலும் முள்வாங்கியும் கிடைக்குது. ஆனா, அவர் அதை அவர் யாருகிட்டயும் சொல்லாமல் மறைக்கிறாரு. ரகசியம் என்னன்னா அதே ஊருல பள்ளக்குடியில இருக்கும் செவனிக்கும் திம்மய நாயக்கரின் மாப்பிள்ளை எல்லப்பனுக்கும் நடந்த காதல் விளையாட்டின் காரணமா மேய்க்க வந்த ஆட்டு மந்தையை இருவரும் மறக்க, அந்த ஆடுகள் ராக்கம்மாவின் பருத்தியை நாசம் செய்து. ஊருல் பஞ்சாயத்து கூட்டப்படுது. பஞ்சாயத்தில உண்மை தெரிஞ்சதா? எல்லப்பனும் செவனியும் என்ன ஆனார்கள் என்பதே இந்த கிடை நாவல்.
முருகா முருகா என்று நேர்மையா வாழும் ராமக்கோனார் மதிக்கப்படுறாரு. திருட்டுத்தொழிலின் காரணமாக பொன்னுசாமி நாயக்கர் ஊராரின் ஏய்ப்புக்கு உள்ளாகிறாரு. அவரவர்க்கு கிடைக்கும் மரியாதை அவரவர் செய்கையைப் பொறுத்தே அமைதுனு இந்த நாவல் உணர்த்துது…
எல்லப்பனின் கல்யாண ஊர்வலமும், செவனியின் பேயோட்டு வைபவமும் தான் சமூகத்தின் உக்கிரமான முகமாக இருப்பதாய் கிழித்து காட்டி இருக்கிறார் . அவர்களின் பாலினம், சாதி மற்றும் நிதி நிலை ஆகியவற்றின் அடிப்படையில் சமூகம் அவர்களை வித்தியாசமாக நடத்துகிறது என்பதை படிக்கும் போது நெஞ்சம் சற்று கனமாகவே இருக்கிறது.
- எழில்ஆதித்தமிழன்

Comments
Post a Comment