தலித் பார்ப்பனன்
புத்தகத்தின் பெயர்: தலித் பார்ப்பனன்
ஆசிரியர்: சரண்குமார் லிம்பாலே
தமிழில் - ம.மதிவண்ணன்
தலித் பார்ப்பனன் சிறுகதை புகழ்பெற்ற தலித் எழுத்தாளரான சரண்குமார் லிம்பாலே அவர்களால் எழுதப்பட்ட ஒரு சிறுகதை தான். இந்த சிறுகதையில படிகள், குப்பை, கவர்மெண்ட் மாப்பிள்ளை, சுதா, முற்போக்கானவர், இப்படி 10 சிறுகதைகள் இந்த தொகுப்புல இருக்கு. முழுக்க முழுக்க இந்த புத்தகம் ஒரு தலித் ஆணை மையமா வச்சு தான் இருக்கு.ஒரு தலித் சமூகத்தில் பிறந்த ஆண் எப்படி இந்த சமுதாயத்தில வாழ்றான், அவன இந்த சமூகம் எப்படி எல்லாம் பாக்குது, எப்படியெல்லாம் நடத்துது அப்படிங்கறது மிக தெளிவா சொல்லி இருக்காரு லிம்பாலே..
நிறைய தலித் எழுத்தாளர்கள் தலித் இலக்கியவாதிகள் இருந்தாலும் சரண்குமார் லிம்பாலே, அந் த எழுத்தாளர்களுக்கு எல்லாம் எழுத்தாளர் என்று சொல்லலாம். ஏன்னா அவருடைய சுய விமர்சனமும் சுய எள்ளலும் தான் இவரை எல்லா எழுத்தாளர்களுகிட்ட இருந்தும் தனித்துவமா காட்டுது.
தலித் சமூகத்தில் பிறந்துட்டு ஒருத்தன் படிச்சிட்டு ஒரு ஆசிரியரா பள்ளிக்கூடத்துக்கு போறான்.அங்க அவன சுதந்திரமா செயல்பட விடாம அவனை தடுக்குறாங்க, ஒடுக்குறாங்க. காரணம் அவன் ஒரு பட்டியல் இன சமூகத்தை சேர்ந்தவன். இந்த சமூகம் ஒருத்தன் படிச்சாலும், நல்ல டிரஸ் பண்ணாலும் முதல்ல பார்க்கக்கூடியது, அவன் என்ன சாதி அப்படிங்கறதுதான். இத படிகள் அப்படிங்கிற கதைல தெளிவா சொல்லி இருக்காங்க….
இரண்டாவது என்னன்னா. ஒரு தலித் எழுத்தாளர். அவர் எழுதிய புத்தகத்தை உயர் சாதி சமூகத்தில் பிறந்த ஒரு ஆசிரியர் கிட்ட கொடுக்குறாரு. அந்த ஆசிரியரும் அதை வாங்கிகிட்டு, நான் கண்டிப்பா படிச்சிட்டு சொல்றேன் அப்படின்னு சொல்றாரு. ஆனா அந்த தலித் எழுத்தாளர் கொடுத்த, ரெண்டு நாள்ல அந்த புத்தகம் வேறொருத்தங்க கிட்ட இருக்கு. ஆசிரியர் கிட்ட கொடுத்த புத்தகம் இவர்கிட்ட எப்படி இருக்குனு சொல்லிட்டு கேட்கும் போது, அந்த ஆசிரியரோட மனைவி, இந்த புத்தகத்த எல்லாம் யார் படிப்பா இவன் எழுதுன புத்தகத்தை எல்லாம் படிச்சா. நம்ம வீட்டு பசங்க எல்லாம் என்ன நினைப்பாங்க அப்படின்னு சொல்லிட்டு அந்த புத்தகத்தை பழைய புத்தகம் வாங்குற கடைக்கு போட்டு விடுறாங்க…
இதோட தொடர்ச்சியா ஒரு தலித் மாணவன். ஒரு உயர் சாதி ஆசிரியர் கிட்ட படிக்கிறான். அந்த ஆசிரியர் தலித்துகளுக்காக குரல் கொடுக்கக் கூடியவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசக்கூடியவர். அப்படி இப்படின்னு சொல்லிட்டு நிறைய மேடைகளிலும் அவருடைய எழுத்துக்களையும் சொல்லக்கூடிய ஒரு ஆளா இருக்கிறார்.
அவரு அந்த தலித் மாணவனை வீட்டுக்கு கூப்பிட்டு, காபி கொடுத்து உன் கதையெல்லாம் சொல்லுப்பா உன் கதையெல்லாம் நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு, இப்படியும் இந்த மனுஷங்க இருக்காங்க. அப்படின்னு சொல்லிட்டு, அந்த மாணவன் சின்ன வயசுல இருந்து பட்ட அவமானங்கள் கஷ்டங்கள் எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்றாரு. சொல்லி முடிச்சதும் இத அப்படியே புத்தகமா போடலாம், தலித் எழுத்தாளர்கள் இப்ப ரொம்பவே கம்மி, நீ இந்த புத்தகத்தை புத்தகமா ரெடி பண்ணு நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு அந்த ஆசிரியர் சொல்றாரு..
ஆனா அந்த மாணவன், கல்லூரி படிப்பை முடிச்சுட்டு கொஞ்சம் வருஷம் கழிச்சு, ஒரு அழைப்பிதழ அந்த மாணவன் பார்க்கிறான். என்ன அழைப்பிதழ்னா, அந்த ஆசிரியரோட புத்தக வெளியிட்டு விழா. அந்த புத்தகத்தை எப்படியாவது வாங்கி படிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு அந்த மாணவன் வாங்கி படிக்கிறான். முழுக்க முழுக்க அவனுடைய கதை தான் அந்த புத்தகத்தில் இருக்கு. அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மாறாமல் அப்படியே எழுதி இருக்காரு. அப்பதான் அந்த மாணவன் புரியுது,நம்ம கிட்ட முற்போக்கா நமக்கு ஆதரவா பேசிட்டு, நம்ம கிட்ட இருந்து எல்லாம் இவனுங்க சுரண்டிக்கிறாங்கனு புரிஞ்சிக்கிறான்..
”பொதுவில் நான் எவ்வளவு முற்போக்கானவன் என ஒரு ஆதிக்க சாதிக்காரன் உரிமை கொண்டாடி கொண்டாலும், தன்னுடைய சாதியை பற்றியும் சமூக அந்தஸ்து பற்றியும் எப்பவும் கவனமாக இருப்பாங்க. அலங்காரமா இருப்பதற்கும் சிரிக்கையில் உலகிற்கு காட்டுவதற்கும் என்று மனிதன் கச்சிதமே வடிவமைக்கப்பட்ட 32 பற்களை தனியே கொண்டு செல்கிறான் என்று மராத்திய சொலவடை சொல்வது தான் எவ்வளவு உண்மை. வாயறவை போட உதவும் மற்ற 32 பற்களும் தான் உண்மையானது. இந்த சொத்தைப்பற்கள் பிடுங்கப்பட வேண்டியது. அவை நஞ்சால் நிரப்பப்பட்டு இருக்கின்றன இப்ப பற்கள் மிதமின்றி வெளியேற்றும் நஞ்சு மொத்த தலைமுறை பாழடைத்து விட்டன.”
”ஒவ்வொரு எழுத்தாளனும் திருடன் தான் அடுத்தவங்க அனுபவங்களை முதல்ல திருடன் அப்புறம் அதை எழுதுறான்”
இப்படியான வாசகம் இந்த முற்போக்கானவன் கதையில இடம் பெற்று இருக்கு...
”உயர்சாதியினருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையில் மட்டும் தீண்டாமை இருக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள்,இடையே ஒரு கராரான சாதிய ஒழுங்கு இருக்கிறது. இந்து சாதி அமைப்பின் கடைசி கழிவாக மங்குகளே இருக்கின்றார்கள். ஒரு கிராமத்தில் நான்கு அல்லது ஐந்து மங்கு குடும்பங்கள் இருந்தால் அவர்களது குடிசை எல்லாம் சேர்த்து மங்கு சேரி என்று அழைக்கப்படும். மகர்கள் மங்குகளை கீழாக பார்த்தார்கள் மகர்களின் சேரி மங்குகளின் சரி என இரண்டு சேரிகளுமே ஊருக்கு வெளியில் தான் அமைந்திருக்கின்றன, என்றாலும் மலர்களின் சேரிக்கும் மங்குகளின் சீரிய உடல் ஒரு சம்பந்தமும் இல்லை”.
நாமலே ஒருத்தன் கிட்ட அடிமையா தான் இருக்கோம், நம்மளே ஒருத்தன கீழ் சாதியா தான் பாக்குறோம். இந்த நிலைமை இன்னமும் இந்த சமுதாயத்தில் இருந்துட்டு தான் இருக்கு. புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லுவாரு, அவன் அடிமையா இருக்கான் அப்படின்னு உணர்த்துனா போதும், அதுக்கப்புறம் அவனே கிளர்ந்து எழுந்து போராடுவான்னு சொல்லுவாரு. அந்த மாதிரி நாம ஒருத்தன் கிட்ட அடிமையா தான் இருக்கோம் அப்படின்னு சொல்லிட்டு ஒருத்தன் உணர்ந்துடான்னா அப்புறம் அவன் இன்னொருத்தன் அடிமையா பார்க்க மாட்டான் அப்படிங்கறது மஞ்சூட்டப்பட்ட ரொட்டி கதை மிக தெளிவா உணர்த்துது…
இந்த தலித் பார்ப்பனன் அப்படிங்கற சிறுகதை. ஒரு தலித்,பார்ப்பனர் கூட நண்பரா இருப்பான். அந்த பார்ப்பன நண்பர், தலித் வீட்டுக்கு வருவாரு வந்துட்டு பேசுவாரு, பழகுவாரு. எப்படிங்க இங்கெல்லாம் இருக்கீங்க எல்லாரும் ஒரு மாதிரி இருக்காங்க, ஒரே அசிங்கமா பேசுறாங்க. அவங்க மொழி எல்லாம் வேற மாதிரி இருக்கு. உங்களுக்கும் குழந்தை குட்டிங்க இருக்காங்க இந்த இடத்தை விட்டு நீங்க வேற இடத்துக்கு வந்துருங்க அப்பதான் உங்க வாழ்க்கை தரம் மாறும் அப்படின்னு சொல்றாரு. அந்த பட்டியல் இனத்தை சார்ந்தவரும், இது சரியா தான் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு ஒரு பார்ப்பனர்கள் இருக்க உயர்சாதி ஆளுங்க இடத்தில வந்து குடியேறுராங்க. அங்க போன உடனே ஒரு வாழ்க்கை தரம் பேச்சுமுறை எல்லாமே மாறுது. இங்க இருக்கும்போது தலித்துகளுக்காகநிறைய குரல் கொடுத்துட்டு போராடிட்டு இருந்தாரு. ஆனால் அங்க போன உடன வெறும் டொனேஷன் கொடுக்கிறது மட்டுமே வைத்துக்கொண்டார். இந்துக்களுக்கு எதிராகவும் ஆர்.எஸ்.எஸ். ஓட சேர்ந்து அங்க அவருடைய சித்தாந்தங்களை பேசிக்கொண்டு இருந்தார். அதனால ஒரு பெரிய ஆளாயிட்டாரு, பெரிய இடத்துக்கு போயிட்டாரு.
இப்படி தன்னோட வாழ்க்கை தரத்தையும் பேச்சு முறையையும் தன்னுடைய அந்தஸ்தையும் உயர்த்துனதுக்கு அப்புறம், அவர் ஒரு தலித்தா தான் பார்த்தாங்க. இவர் கூட இருந்த எல்லாரும் சொல்லுவாங்க நீ ஒரு தலித் பார்ப்பனன் ஆயிட்டனு.. கடைசியா தான் இவருக்கு புரியும் என்ன தான் இவங்க நம்மல நல்லா கவனிச்சாலும், நம்மள ஒரு தலித்தா தா பாக்குறாங்கனு.
”மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டால் மதத்துக்கு ஒன்றும் நடந்து விடவில்லை என்றாலும், பொது சொத்துக்கள் அநியாயத்திற்கும் பாழாக்கப்படுகின்றன. கலவரங்களும் தீ வைப்புகளும் நடந்திருக்கின்றன. சுதந்திரம் அடையும் நோக்கில் நாட்டுப்பற்றை தட்டி எடுப்பதற்கான ஒரு இயக்கமாக பிள்ளையார் சதுர்த்தியை கொண்டாடுவதை திலகர் துவக்கி வைத்தார். இப்போதெல்லாம் மதவெறி மட்டுமே ஊட்டப்பட்டு அதன் விளைவாக பகைமையும் வன்முறையுமே ஏற்படுகிறது. பகை மூட்டி விடுதல் நடக்கும் வரையிலும் உறவுகள் நன்றாக இருக்கும்னு, பிள்ளையார் சதுர்த்தி அப்படிங்கற சிறுகதைல ரொம்ப அழகாவே ஆசிரியர் வந்து சொல்லி இருக்கிறார்..
இப்படி உள்ளத உள்ளபடியே சொல்றதுனால தான் சரண்குமார் லிம்பாலே எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு எழுத்தாளராக இருக்கிறார். எழுத்து நடையும் சரி,இதுல வரக்கூடிய கதைகளும் சரி ஒவ்வொருத்தரும் உணரக்கூடியதாகவும், மத்தவங்களோட கஷ்டத்தை அவங்களோட வாழ்க்கை தரத்தை வாழ்க்கையை அவங்க எப்படி எல்லாம் சமுதாயத்தில் கஷ்டப்படுறாங்க அப்படின்னு சொல்லிட்டு புரிஞ்சுக்க கூடிய ஒரு கருவியா இந்த புத்தகம் வந்து இருக்கு....
- எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment