சேகுவேரா வேண்டும் விடுதலை
புத்தகத்தின் பெயர் : சே குவேரா வேண்டும் விடுதலை
ஆசிரியர் : மருதன்
தான் வாழ்ந்த காலம் முழுவதும் எது நம்மால் செய்ய முடியாதோ அதை எல்லாமே செய்ய முடியும்னு கனவு கண்டவர் சேகுவேரா. அதனால் தான் அவருடைய வாழ்க்கை ஒவ்வொரு பக்கமும் அதிரடியாக இருக்கு. பிறப்பால் ஒரு அர்ஜென்டைனர் அப்படின்னாலும் பிடல் காஸ்ட்ரோவோட புரட்சி குழு இணைஞ்சு கியூபாவின் விடுதலைக்காக மிகப்பெரிய அளவில போராடினார்.
கியூபா விடுதலைக்கு சேகுவேரா ஒரு முக்கிய பங்கு வகிச்சிருக்காரு.கியூபா விடுவிக்கப்பட்ட உடனே சேகுவேராவுக்கு பல உயர் பதவிகள் கொடுக்கப்பட்டது. நாற்காலியில் உட்கார்ந்து ஆவணங்கள் பார்க்க விருப்பம் அவருக்கு இல்ல. உதறி தள்ளிட்டு துப்பாக்கியேந்தி பொலிவியாவுக்கு போனாரு.
அங்க அடர்ந்த காட்டுல அடுத்த புரட்சிக்கான ஆயத்தங்கள் செஞ்சாரு. பொலிவியாவுக்கும் வேண்டும் விடுதலைனு போராடுனாரு.
கியூபாவுக்கு பொலிவியாவுக்கும் சேகுவாரா ஏன் போராடனும்? யார் அவருடைய எதிரிகள்?சிஐஏ ஏன் அவரை வலை வீசி தேடுச்சு? சேகுவேராவ கொன்றவர்கள் யார்? இதற்கெல்லாம் இந்த புத்தகம் பதில் சொல்லும்..
ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும். சே வின் வாழ்வு மட்டுமல்ல அவரது மரணமோ இந்த செய்தியை தான் உரக்கச் சொல்லுது.
வெறும் போராட்டங்கள் மட்டுமே சேகுவேரா வாழ்க்கை இல்ல. அதற்கிடையில் நிறைய பயணங்களும் அளவுக்கு அதிகமான காதலும் செஞ்சிருக்காரு.
எந்த நாடு அடிமையா இருக்கோ அங்கெல்லாம் சேகுவேரா பயணம் செஞ்சார். அடிமையா இருக்க நாட்டுக்கெல்லாம் வேண்டும் விடுதலை அப்படின்னு பிரிவு மிகப்பெரிய போராட்டங்களை செய்தார்..
சேகுவாரா ஒரு தனி மனிதர் அல்ல ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனசாட்சி..
-எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment