சாவுசோறு
புத்தகத்தின் பெயர்:சாவுசோறு
ஆசிரியர்: இமையம்
இமையத்தின் சாவுச்சோறு சிறுகதைய படிச்சி முடிச்சேன். இதுல இருக்கஒவ்வொரு கதையில வரும் பெண்களும் இதயத்தை வந்து முட்டுபவர்கள். சாவு சோறு கதையில ஓடிப்போனபெண்ணைத் தேடி அலையும் அம்மா, தொட்டிநாயக்கர் இனத்தைச் சேர்ந்த,வயதுக்கு வந்த அப்புறம் தனியாக உட்காரவைக்கப்பட்டப்போ தவறுதலாகக்கடத்தப்பட்ட திருட்டுப் போன பொண்ணு என்றழைக்கபடும் பெண், கணவன் இறந்த அப்புறம் அவன் தம்பி படிக்க வேணும்னு, பிடிவாதம் பிடித்து அவனுக்கு வாத்தியார் வேலை கெடச்சதும், காலில் புழுதியுடன் வந்த அவன் கால்களைத் தன் முந்தானையால் துடைத்து, செருப்பில்லாமல் வேலைக்குப் போவதால்அவன் காலில் முள் குத்தும் என்று அவன் போகும் ஏழு மைல் வழியைப்பெருக்குகிறேன் என்று சொல்லும் பெண், பேயாகியபின் பூசாரியிடம் க்வார்டர்கேட்கும் பெண் பேய், கழிவறை உள்ள வீடு உள்ளவனை மணக்க விரும்பும் கிராமத்துப் பெண், ஓடிப்போன பெண் சாக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் தாய்னு, தமிழ் நாட்டின் பல கிராமங்களிலும் சிற்றூர்களிலும் வாழும் பெண்கள் ரொம்ப தெளிவா காட்டியிருக்காரு.
திருடப்போகும் முன் ஆகாச வீரனிடம் வாக்கு கேட்கப்போகும் திருடன், தன்னைப்படிக்க வைத்த அண்ணியின் ஒவ்வொரு செயலையும் மறக்காமல் நினைவுகூர்ந்து வயது காலத்தில் வாய்விட்டு அழும் ஆண், தன்னுடன் படித்த பெண்ணைஉள்ளூரக் காதலித்து பல ஆண்டுகளுக்குப் பின் அவள் சந்திக்கச் சொல்லும்போது பரபரப்புடனும் கூச்சத்துடனும் போய் அவள் கடன் கேட்கும் தொகையை ஏற்பாடு செய்ய ஒப்புக்கொண்டபின் அவள் “எங்கு வேண்டுமானாலும் வருகிறேன்;லாட்ஜுக்கு மட்டும் வேண்டாம்” என்று சொன்னதும் அந்த கணத்தின் இனிமை முற்றிலும் குலைந்துவிட்டதாய் எண்ணும் ஆண், பேயுடன் பேசும் பூசாரி ஆண்களும் இந்த புத்தகத்துல வறாங்க…
என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் மாதிரி வீடும் தெருவும், கணவனும் பிள்ளையும்னு மட்டுமே இருக்கக்கூடியவங்க அல்ல. பல ஊர் சனங்கள் திரண்டு இருக்கக்கூடிய சபையில் ஆடக்கூடியவர்கள், பாடக்கூடியவர்கள், பேசக்கூடியவர்கள். எந்த நிலையிலும் தேங்கிப்போகாமல் தண்ணீர் மாதிரி. ஓடிக்கொண்டேயிருப்பவர்கள். ஒவ்வொரு கணத்தையும் ஆசைதீர வாழத் துடிப்பவர்கள்..
புத்தகம் முழுவதையும் படித்து முடித்தபோது ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்த நிறைவு கொடுக்குது….
-எழில்ஆதித்தமிழன்

Comments
Post a Comment