மாமன்னன்

திரைவிமர்சனம்: மாமன்னன்
இயக்குனர்: மாரி செல்வராஜ் 


அதிகாரத்திற்கு வந்தால் மட்டும், இங்கு ஒடுக்கப்பட்டவர்களின் நிலை மாறிவிடுறதா என்ன' என்பதைப் பற்றிப் பேசுகிறது மாமன்னன். 



இந்த படத்தின் சாரம்சம் "பிறப்பொக்கும்" தான்..
எல்லாரும் சமமா நடத்தனும்,சமமா பாக்கனும்னு மாரிசெல்வராஜ் ரொம்ப நேர்த்தியா சொல்லி இருக்காரு..

இந்த படத்துல இருந்து நா என்ன பாத்தேன் அப்படின்னா.. 
மாமன்னன்னு பேர் வச்சிட்டு மன்னுனு அழைக்கப்படுற பிற்படுத்தப்பட்டவரோட வலி எப்படி இருக்கும்னு இந்த படத்துல காட்டி இருக்காரு‌‌...


எல்லாரையும் உக்காந்து பழகுங்கனு சொல்ற ஒரு எம்எல்ஏ ஒரு எடத்துல உக்கார முடியாத சூழல் ஏற்படுது.. காரணம் அந்த எம்எல்ஏ ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர்..என்னதான் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருத்தர் அதிகாரத்துக்கு வந்தாலும்,எதோ ஒரு எடத்துல அவன் ஒடுக்கப்படுறான்னு மாரி செல்வராஜ் ரொம்ப நேர்த்தியா சொல்லி இருக்காரு..


ஒருத்தனோட வெறி எப்படி ஓராயிரம் பேரோட மானமா மாறும்னு ஒரு கேள்வி படத்துல வச்சி இருப்பாங்க..அதுக்கான பதில் இளையதலைமுறை தான்.அவங்களால மட்டும் தான் இத மாத்த முடியும்னு, இளைஞர்கள் மனசுல விதைச்சு இருக்காரு மாரி செல்வராஜ்..


முதல் சீன்ல 4 சிறுவர்கள் கோயில் கிணத்துல குளிக்க போவாங்க.அந்த 4 பேரையும் வேறொரு சாதிக்காரங்க கல்லால அடிச்சு சாகடிப்பாங்க.. இந்த சீன் படத்துல ஒரு தாக்கத்த ஏற்படுத்த மாரி செல்வராஜ் கற்பனையா வச்சி இருப்பாருனு தான் தெரியும்..ஆனா இப்படி ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்து இருக்கு... 

இது ஒரு உண்மைச் சம்பவம். பெரம்பலூர் வட்டத்தில் குளப்பாடி கிராமத்தில் தீண்டப்படாத மக்கள், கிணற்று நீரைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தண்ணீருக்குள் மின்சாரம் பாய்ச்சி இருந்தாங்க.. அங்க தண்ணீ குடிக்கச் சென்ற தலித் குழந்தைகள் அந்த மின்சாரத்துல மாட்டி இறந்து போனாங்க.. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல...


இந்த படத்த பார்த்த அப்புறம் புரட்சிக்கவிஞர் இன்குலாப் எழுதுன கவிதை ஒன்னு நியாகம் வருது...

"மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா”

இந்த கவிதை மாமன்னனோட ஒத்து போகக்கூடியதா இருக்கு...

மனுசன மனுசனா பாக்கனும்,படத்த படமா பாக்கனும், எல்லாரையும் சமமா பாக்கனும், சாதிய வரைமுறைகள இளைய தலைமுறைகள் அடிச்சு உடைக்கனும்னு மாமன்னன் சொல்றான் நமக்கு....

                     - எழில்ஆதித்தமிழன் 

Comments