திதி

                                       திதி



திங்க கிழமை காலைல எல்லாரும் அவசர அவசரமா அங்கயும் இங்கயும் நடமாடிகிட்டே இருக்காங்க. ரோடுல எல்லா  வண்டிங்க சர்ர்…சர்ர்னு… இரைச்சல் கொடுத்துட்டே போகுது. அந்த ரோட்ட தான்,க்ராஸ் பண்ணி ஆப்போசிட்ல இருக்க பஸ் ஸ்டாப்புக்கு ஜனங்க எல்லாரும் போய் ஆகனும்..

அப்படி இருக்கும் போது எல்லாரும்     அக்கம்பக்கம் வண்டி எதாவது வருதானு பாத்து அந்த ரோட்ட கிராஸ் பண்றாங்க.ஒருசில பேர் கிராஸ் பண்ணும் போது வண்டி ஓட்டுறவங்கள திட்டுறதும்,ஒருசில பேர் ரோட்ட கிராஸ் பண்றவங்கள திட்டுறதுமா இருக்காங்க…அப்போ தான் ஒரு ஸ்கூல் குழந்தை. கால்ல செருப்பு இல்லாம கொதிக்கிற தார் ரோட்டுல சூடு தாங்க முடியாம,கால வச்சி வச்சி எடுக்குறா. பெருசா ஒரு நீல பாவடையும், மேல ஒரு வெள்ள சட்டையும் போட்டுடு இருக்குறா. அந்த சட்டையோட பட்டனும் மேலும் கீழுமா போட்டு இருக்கு. ஒரு ஒரு எடத்துல பட்டன் பிஞ்சி  ஊக்கு தான் போட்டு இருக்குறா. தோல்ல ஒரு மஞ்ச பை மாட்டி இருக்கா. தலையில எண்ணெய் வைக்கல, முகத்துக்கு பவுடர் பூசல,ஆன முகத்துல மட்டும் சிரிப்புக்கு கொற இல்ல. மூக்குல சளி ஒழுகி வரும் போது அத தொடைச்சிட்டு, அந்த ரோட்ட கிராஸ் பண்ண  ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்குறா.. யாரும் அந்த குழந்தைய கிராஸ் பண்ணி விடல்.எல்லாருக்கும்  அவங்க அவங்க வேல முக்கியமா இருந்ததுனால,அந்த குழந்தைய கண்டுக்கல.. அந்த குழந்த ரோட்டுல எதாவது வண்டி வருதானு பாத்து ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கிறா,தூரத்துல வண்டி ஹாரன் சத்தம் கேட்ட ஒடனே பயந்து மறுபடியும் பழைய எடத்துல நின்னுடுறா. மறுபடியும் வலது பக்கமும் இடது பக்கமும் பாக்குறா,  ரெண்டு ஸ்டெப் எடுத்து வைக்கிறா,ஹாரன் சத்தம்  கேட்ட ஒடனே பழைய எடத்துக்கு போய் நின்னுடுறா. இப்படியே பலமுறை பண்ணுறா. ஆன யாரும் அந்த குழந்தைய கண்டுக்கவே இல்ல..


 
சரி எப்படியாச்சும் கிராஸ் பண்ணி ஆகனும் னு முடிவு  பண்ணி, அந்த குழந்தை கிராஸ் பண்ணும் போது , பக்கத்துல ஒரு பிரேக் அடிக்கிற சவுன்ட் கேட்ட ஒடனே அந்த குழந்தை பயந்து போய்,தன்னோட கண்ண இறுக்கமா மூடிக்கிறா. கொஞ்ச நேரம் கழிச்சு கண்ண திறந்து பாக்குறப்போ,பக்கத்துல ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவில இந்த குழந்த மாதிரி இருக்க ஸ்கூல் குழந்தைங்கள ஏத்திட்டு அவரசமா அந்த அண்ணா போய்டு இருக்காருனு தெரியுது. கண்ண திறந்து பாத்த ஒடனே அந்த ஆட்டோ அண்ணா செம்ம திட்டு, வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா ஆளும் மூஞ்சியும் பாரு, எனக்குனு வந்து சேருறாங்கனு திட்டிடு போறாரு. அப்புறம் அந்த குழந்த கொஞ்சம் பயத்தோட அந்த ரோட்ட கிராஸ் பண்ன ஸ்டார்ட் பண்ணுது, ரோட்ட கிராஸ் பண்ணி பஸ் ஸ்டாப் பக்கத்துல போகும் போது, யாரோ ஒரு வண்டி ஒரு ஆள் மேல மோதுனா மாதிரி ஒரு சத்தம். இந்த குழந்தை மறுபடியும் தன்னோட கண்ண இறுக்கமா மூடிக்கிறா… கொஞ்ச நேரம் கழிச்சி கண்ண திறக்கும் போது தன்ன சுத்தி எல்லாம் ஓடுற மாதிரியும், ஆம்புலன்ஸ் சத்தம் கேக்குறா மாதிரியும் இருக்கு.. எல்லாரும் அலறியடிச்சு போறாங்க,பதட்டமா இருக்காங்க…


ஆனா இந்த குழந்தைக்கு மட்டும் எல்லா சத்தமும்  லேசா தான் கேக்குது..அப்புறம் தான் அந்த குழந்த தெரிஞ்சிக்குது நம்ம மேல் தான் வண்டி மோதி இருக்குனு..ஒடனே அந்த குழந்தைய தூக்குறாங்க,  தூக்குறவங்க சட்ட முழுக்க ரத்தமா இருக்கு. அந்த ரத்தத்த பாத்த ஒடனே அப்பானு ஒரே சத்தம் …

அதுக்குள்ள அவங்க அம்மா வந்து எழுப்புறாங்க…மணியாச்சு எந்திரி புள்ள அப்பாக்கு திதி கொடுகக்கனும்னு..
அந்த குழந்தையோட அப்பா ரோட்ட கிராஸ் பண்ணும் போது எறந்து போய் இன்னியோட 1 வருசம் ஆக போது…அத யோசிச்சிட்டே அந்த குழந்த தன்னோட அப்பாக்கு திதி குடுக்க அவங்க அம்மா கூட ரோட்ட கிராஸ் பன்னிபோய்கிட்டு இருக்கா…..

அப்போ தீடீரென ஒரு வண்டி பிரேக் பிடிக்ககூடிய சத்தம்... உடனே குழந்தை பயத்துல அவளோட கண்ணை இறுக்கமா மூடி கிட்டா ஆனா இந்த முறை அந்த குழந்தையோட சேர்ந்து குழந்தையின் அம்மாவும் கண்ணை இறுக்கமா மூடிகிட்டாங்கா…….


                                 -எழில்ஆதித்தமிழன் 

Comments