வரப்புகள்
புத்தகத்தின் பெயர் : வரப்புகள்
ஆசிரியர் : பூமணி
ஒரு ஸ்கூல்ல இருக்கும் டீச்சர்ஸோட வாழ்க்க பத்தினது தான் இந்த நாவல். இந்த நாவலோட சிறப்பே டீச்சஸ் குள்ள இருக்கும் உறவை எதார்த்தமா காட்டுறது தான்.
கதை பெரும்பாலும், பாண்டியன், ரங்கராஜன் மற்றும் தமிழய்யா மூலம் தான் நகருது. இவங்க மூனு பேரும் ஒரே வீட்ல வசிக்கிறாங்க. பாண்டியன் விளையாட்டு வாத்தியாரு. விளையாட்ட தவிர பல விசயங்கள கொழந்தைங்களுக்கு சொல்லி குடுப்பாரு. இந்தி திணிப்ப தீவிரமா எதிர்க்கிறவரு. எல்லார்கிட்டயும் அன்பா பழகுவாரு.
ரங்கராஜன் வரலாற்று டீச்சர். இவரு ஒரு பிராமணரு. அவர் குடும்பம் அவரு சம்பளத்தை தான் நம்பி இருக்கு. வயசாகியும் பெண் கிடைக்காம கல்யாணம் செய்யாம இருக்காரு.
தமிழய்யா கல்யாணம் ஆனவரு. ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. எதையும் நிதானமா யோசிச்சு செய்ய கூடியவரு. இந்த மூனு பேருக்கும் தனி கதை இருக்கு.
ஆண்கள் மட்டும் ஆசிரியரா இருந்த ஸ்கூல்ல திடீர்னு ருக்மணினு ஒரு பெண் இந்தி சொல்லி கொடுக்க வராங்க. ரங்கராஜனுக்கு ருக்மணி டீச்சரை பாத்த கொஞ்ச நாள்ல புடிச்சிடுது.ஆனா, அத அவரு அவங்க கிட்ட சொல்லவே இல்ல. கொஞ்ச நாள் கழிச்சு ராஜேஸ்வரி டீச்சர் வேலைக்கு சேருறாங்க.
பாண்டியனுக்கும் ராஜேஸ்வரி டீச்சரை புடிச்சிடுது. காலபோக்கில ரெண்டு பேரும் காதல் வலையில விழுறாங்க.
"டீச்சரம்மா அக்ராரத்துப் பொண்ணுன்னுதான சாமி இப்பூட்டுக் கணக்கு போட்ருக்காரு. இதே வேதக்கார எட் மாஸ்டர் அய்யராருந்து இல்ல அந்தம்மா வேற ஒரு அய்யரத் தேடிக்கிட்ருந்த பள்ளிக்கூடத்துக்குள்ள பத்துப் பேருக்கு முன்னால சண்ட நடந்திருக்குமா. என்னக் கேட்ட நடந்துருக்காதுன்னுதான் சொல்லுவேன்" - இதவிட சாதியோட இறுக்கத்தை சொல்ல முடியாது.
ரங்கராஜனோட கோபம் எதனால? இந்த விவரம் தெரிஞ்சிருந்தா அப்படி பேசியிருப்பானா?
இப்படி புத்தகத்துல நிறைய வாசகம் நம்மல கவர்ந்திழுக்கும்…
ஸ்கூல்ல வேலை செய்யும் மாணிக்கம், வையாபுரியோட கதாபாத்திரம் கதைக்கு மேலும் வலுவூட்டுது. அதிலையும் அவங்களோட சாதியை பத்தின பேச்சுகள் சாதிய படிநிலைய மிக தெளிவா எடுத்து காட்டுது. கதையில பெரும்பாலான பகுதி உரையாடல்ல தான் இருக்கு. பலவிதமான டீச்சர்கள நம்ம கண்ணுமுன்னே வந்து போகும். ஏன் நாம படிச்ச ஸ்கூல்ல இருக்க டீச்சர்ஸ் கூட நம்ம கண்ணுமுன்னே வந்து போவாங்க…
டீச்சர்ஸோட அரசியலும் அங்கங்க வரும். இந்த கதையில கிருஷ்ணசாமி வாத்தியாரு விவசாயம் செஞ்சிகிட்டே ஆசிரியர் வேலைய செய்றாரு. அவர போல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேல செய்றாங்க..
வாட்ச்மேன் வீரணன் எம்ஜியார் படம் பார்த்துவட்டு செய்யும் செயல்கள எல்லாம் நகைச்சுவையா வாசிக்கலாம்..
கடைசியா கிளைமேக்ஸ் தான் ஹைலைட். ரங்கராஜன் வாத்தியாருக்கு வேற ஸ்கூல்ல டிராண்ஸ்வர் கெடச்சிடும். இந்த விசயத்தை கூட இருக்க வாத்தியாருங்கனால தாங்கிக்கவே முடியாது. இந்த பக்கத்த படிக்கும் போது நம்மளையே அறியாம நாம அழுதுடுவோம்…
- எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment