ரயில் நிலையங்களின் தோழமை


புத்தகத்தின் பெயர்: ரயில் நிலையங்களின் தோழமை
ஆசிரியர்:எஸ்.ராமகிருஷ்ணன்

நான் ரயில்வே ஸ்டேஷன ரொம்ப நேசிக்கிறவன்.அதுமட்டுமல்லாம எங்காவது போகனும் அப்டின்னா பஸ்ஸ விட டிரைன தான் அதிகமா தேர்ந்தெடுப்பேன். அப்படி இருக்கும்போது இந்த புக்கோட பேர் பாத்த ஒடனே எனக்கு புடிச்சி ரொம்ப புடிச்சி போச்சு. 
வாங்கி படிச்சேன்..பயணம் பன்றவங்க படிக்க வேண்டிய ஒரு முக்கியமான புக் இது.

இந்த புத்தகத்தில தன் பயண அனுபவங்களையும்,நிறைய வரலாற்று தகவல்களையும் தன்னோட எழுத்து மூலம் மிகவும் அழகாகவும்,சுருக்கமாகவும் விளக்கி இருக்காரு.
சுற்றுலா அப்படின்னா வழக்கமாக ஊட்டி,கொடைக்கானல்னு அவங்க அவங்க குடும்பத்தோடு போகும் நபர்களுக்கு இந்த புக் படித்த அப்புறம் நிறைய மாற்றம் வரும்.

நம்ம தமிழ்நாட்டில,இந்தியாவில இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்குறதே நமக்கு தெரியலனு.நிறைய இடங்களுக்கு தன்னோட எழுத்தின் மூலமா நம்மள கூட்டிட்டு போறாரு...
அதுமட்டுமல்லாம பயணத்தை பத்தி ரொம்ப தெளிவா நமக்கு சொல்றாரு. பயணம் அப்டிங்கிறது இரண்டு விதமானது.ஒன்னு ஊர் விட்டு ஊர் போகிற பயணம். இன்னொன்னு இருந்த இடத்தில இருந்தபடியே முடிவற்ற உலகத்தில மனசால், நினைவால் சஞ்சாரம் செய்றதுனு சொல்றாரு.‌

இந்த உலகத்தோட முடிவற்ற பயணியா சூரியன சொல்றாரு. 

கல்வி நிலையங்கள உருவாக்கியதில் சமணர்கள் முன்னோடிகள். மலைக்குகைகளில் சமண பள்ளிகளை நிறுவினார்கள். சாதி சமய வேறுபாடற்ற சமத்துவக் கல்வி அவர்களாலே முதன்முறையாக வழங்கப்பட்டதுனு பல தகவல நமக்கு தராரு...
பயணம் செயறவங்க கண்டிப்பா இந்த புத்தகத்தை வாங்கி படிக்கனும்.. நேரம் இருக்கும்போது படிங்க...

                      - எழில் ஆதித்தமிழன்

Comments