பிராமணியம்
புத்தகத்தின் பெயர்: பிராமணியம்
ஆசிரியர்: எம்.வி.சுந்தரம்
இந்த புத்தகத்துல பிராமணியம் எப்படி உருவாச்சு.அது எப்படி சாதிகள பிரிச்சுதுனு தெள்ள தெளிவா சொல்லியிருக்கு. அந்த காலத்துல இருந்த பிராமணியத்த பத்தியும் இந்த காலத்துல இருக்க நவீன பிராமணியத்த பத்தியும் வேறுபடுத்தி காட்டி இருக்கு..
இந்தியாவில் இந்து மதத்தில் பல சாதி பிரிவுகள் இருப்பதால் அது இந்திய மக்கள பாதிக்காது.ஆனா பிறப்புல பிராமணர் உயர்வுனும், மத்தவங்க பிறப்புல பிற்படுத்தப்பட்ட சாதி காரங்க, தாழ்த்தப்பட்ட சாதி காரங்கனும் சொல்ல கூடிய கருத்து இந்தியாவையும், இந்திய மக்களையும் பாதிச்சுட்டு வருதுனு இந்த புக்ல சொல்றாங்க.
பிறப்புல உயர்ந்த சாதியில நான் இருக்கேன்னு நினைக்கிறது நவீன பிராமணியம்னு சொல்றாங்க.
பிராமணியத்த மட்டும் இதுல சொல்லாம, மனு நீதிய பத்தியும் அதோட வரலாற பத்தியும் ஆதாரத்தோட சொல்லி இருக்காரு ஆசிரியர்.
ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்தின பெண்ணோட உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்துவிட்டால் அத்தகைய குழந்தை உயிரோடு இருந்தாலும் பிணம் தான்னு மனுநீதி சொல்லுது.
இப்படி உதாரணத்துக்கு நிறைய விசயத்து ஆசிரியர் நமக்கு சொல்றாரு.நேரம் கிடைக்கும் போது எல்லாரும் கண்டிப்பா இந்த புத்தகத்த படிங்க.
- எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment