தாலிமேல சத்தியம்
புத்தகத்தின் பெயர் : தாலிமேல சத்தியம்
ஆசிரியர் : இமையம்
எழுத்தாளர் இமையத்தோட அரசியல் பகடி, சமூக விமர்சனம் இதையெல்லாம் இருக்கா இந்த தொகுப்பு சிறந்த வாசிப்பு அனுபவத்த தரக்கூடிய ஒரு அருமருந்தா இருக்கு...
அம்மாவின் விரதம் கதையில, சாதி வெறி பெண்களுக்குள்ள எப்படி ஊடுருவியிருக்கு, அது எப்படி தலித் சாதி ஆண்களைத் கல்யாணம் செஞ்சிக்கும், கல்யாணம் செஞ்சிக்கிறதுக்காக ‘ஓடிப் போகும்’ தன்னோட சாதி இளம் பெண்கள் மீதான சொற்கள், உளவியல், உடல்சார் வன்முறையாக வெளிப்படுது அப்டிங்கிறத காட்டுறாரு இமையம். கீழ்ச் சாதியைச் சேர்ந்த ஆணோடு செஞ்சிக்கிட்ட கல்யாணம் தோல்வியில முடிய, தன்னோட ரெண்டு கைக்குழந்தைகள தூக்கிக்கிட்டு வீட்டுக்கு வரும் மகள சாதிய வசை சொல்லால ஏசி வன்முறை தாக்குதல நடத்துறா ஒரு தாய். அவளோட மக ஒடிப்போன அப்புறம் தன்னோட புருஷன் கிட்ட அடியையும், திட்டுகளையும் வாங்குன அந்த தாயே உடல்ரீதியா வன்முறையால பாதிக்கப்பட்டவ தான். இந்த கதையில, அப்பா ஓட சமூகத்துக்கும் சாதி கட்டமைப்புக்கும் இடையில இருக்க தொடர்ப காட்டுறாரு ஆசிரியர்.
ரெண்டாவது, ”கட்சிக்காரரின் பிணம்” இந்த கதையில சடலத்தை அடக்கம் செய்யும் வழிமுறைகளுக்கு இடையே பிரச்சனை வருது. செத்துபோய் இருக்கவர் சார்ந்து இருக்கா அரசியல் கட்சியோட பகுத்தறிவு பிம்பமும், அவரோட சாதிக்காரங்களின் சாதி உணர்வும் கட்சிகாரரோட மரணச்சடங்கு முறை பத்தி விவாதத்த ஏற்படுத்துது. சுடுகாட்டுல கட்சி நிர்வாகிங்க தலைமையில இரங்கல் கூட்டம் நடத்தனுமா அப்படி இல்லனா, சாதியும் சமூகமும் பாலோ பண்ற சடங்குகள பாலோ பண்ணனுமா? செத்துப்போனவரு தன்னோட கட்சியின் கொள்கைகள உயர்த்திப்பிடித்து பகுத்தறிவுவாதியோட வாழ்க்கைய வாழ்ந்தவரு. ஆனா, அவரோட சொந்தகாரங்க சாதி சம்பிரதாயப்படி அவரோட இறுதி சடங்க செய்றத அவங்க சாதிய உறுதிப்பாட்டோட பேரில உரிமை கேக்குறாங்க. அரசியல் கட்சியோட மாறிவரும் அரசியல் நம்பிக்கை முறைகள இமையம் அம்பலப்படுத்துறாரு. என்னதான் பகுதறிவோடு வாழ்ந்தாலும், நம்ம இறந்த பிறகு இந்த சமூகம் ஒரு சம்பிரதாயத்துகுள்ள அடக்கிட்டு தான் கூட்டிட்டு போகும்னு தெளிவா சொல்லி இருக்காரு.
அடுத்ததா, ரவ நேரம் கதையில. நடுத்தர வயது தம்பதியிடையே பாலியல் நெருக்கம் கம்மியாயிட்டே போறதையும் அந்த, மனைவியோட தேவ கணவனால எப்படி புறக்கணிக்கப்படுது அப்டிங்கிறதயும் அழகா நமக்கு எடுத்துகாட்டுறாரு ஆசிரியர். கணவான பலமான குறட்ட சத்த, அவ அவன சாபம் விடவும், கிண்டல் செய்யவும் வைக்குது. ஒரு பெண்ணோட அடி ஆழமான எண்ணம், ஆசை, பலவீனங்கள பிரதிபலிக்கிறதுல தனி முத்திரை பதிக்குது.
பணம் வாங்குன நாயெல்லாம் ஓட்டுப்போட்டிருந்தா நான் ஏன் தோக்க்போறேன்?’ ஊர் பிரசிடெண்ட் தேர்தலில் தோத்துப்போன ராஜனோட கோபத்தைக் காட்டுது தாலி மேல சத்தியம் சிறுகதை. ஊருல ஓட்டுக்கு எல்லோருக்கும் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்தும் அவன் தோத்துப்போறான்.அதுக்கு அப்புறம் வீடு வீடாக வந்து கொடுத்தப் பணத்தைக்கேக்குறான். காசு வாங்கிக்கிட்டு அவனுக்கே ஓட்டு போட்டு இருக்கும் அலமேலுவுக்கோ தர்மசங்கடம் ஏற்படுது. உனக்கு தான் ஓட்டு போட்டேன்னு தாலி மேல சத்தியம் செஞ்சும் அவன் பணத்த வசூலிக்காம போவ போறதில்லைனு சொல்லுறான். ஓட்டுக்கு ஐயாயிரமும் ஆறாயிரமுமா 68 லட்சம் அவன் கொடுத்ததாவும், அததுக்கு மேலும் 12 லட்சம் செலவழித்திருப்பதாவும் சொல்றான். ஊர் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு 80 லட்சம் செலவழிச்சியிருக்கும் கொடுமைய இந்த கதையில பாக்கலாம். இந்த நிலைமைக்கு வந்து சேர்ந்திருக்கும் நம்மளொட மக்களாட்சியோட நிலையைக் பாத்து விமர்சிக்க வேண்டியது நம்மளோட கடைமையாகத்தான் இக்கதை நிலை நிறுத்துது.
எழுத்தாளர் இமையத்தோட அரசியல் பகடி, சமூக விமர்சனம் இதையெல்லாம் இருக்கா இந்த தொகுப்பு சிறந்த வாசிப்பு அனுபவத்த தருது...
- எழில் ஆதித்தமிழன்

Comments
Post a Comment