செடல் (நாவல்) - இமையம்

புத்தகத்தின் பெயர்: செடல்
ஆசிரியர்: இமையம் 

செடல் அப்படின்னா திருவிழா காலத்துல கிராமத்து சந்தைலயும், விழாக்கள்லயும் வரும் குடை ராட்டினத்தை குறிக்கும். செடல் தன்னோட கிராமத்து கோவிலுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட தலித் சமூகத்த சேர்ந்த ஒரு தேவதாசிப் பெண். தலித் சமூகத்துக்குள்ள, கூத்தாடினு அழைக்கப்படுற கோயில்லயும், கிராம சந்தைலயும் ஆடிப்பாடி ஜனங்களை சந்தோஷப்படுத்தும் பிரிவ சேர்ந்தவள் தான் செடல். 


"பொட்டு கட்டிவிடுதல்" அப்படிங்கிற வார்த்தைய நம்மல்ல சில பேர் கேள்வி பட்டு இருப்போம். அதே போல, இந்த காலத்துல கூத்து நாடகம் திருவிழா காலத்துல நடந்துட்டு வறரது சிலருக்கு தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இருக்கு.
1950-களோட காலகட்டத்துல  வட தமிழகத்தோட தென் பகுதியில தெருக்கூத்து குடும்பத்துல பொறந்த கடைக்குட்டி பெண் தான் செடல். இந்த செடல சுத்தி பின்னப்பட்டதா இருக்குறது இந்த நாவல்.

ஊரோட நல்லதுக்காக, கூத்தாடும் குடும்பத்துல உள்ள சின்ன பெண்ணான செடல செலக்ட் பண்ணி, அவளுக்கு மொட்டை அடிச்சு சின்னதா இருக்க தங்க பொட்ட போட்டு கோயிலுக்கும், சாமி சேவைக்குமா இருக்கா குடும்பத்துல இருந்து தனிச்சு விடப்படுறா செடல். அளவுக்கதிகமாக பஞ்சத்துல இருந்து , இந்த கொழந்தையாவது வயிறார சாப்பிடட்டும்னு அவளோட பெத்தவங்க இதுக்கு சம்மதிக்கிறாங்க...
அதுக்கு அப்புறம் செடல் வளர வளர, அவ சந்திக்கும் மனுசங்களும்,துயரங்களுமா கிட்டத்தட்ட, அவளோட நடுத்தர வயசு வரைக்கும் அவளோட பார்வையிலேயே இந்த நாவல் போய்டு இருக்கு. 

குடியான மக்களுக்கும், பட்டியலின மக்களுக்குமான வாழ்வியல் முறை,சாதி வன்மம், கூத்து தொழிலோட கஷ்டம்,நஷ்டம் கோவில் திருவிழாக்கள்ல 'பள்ளு' பாட போகும் போது கிடைக்கும் தான் தர்மம். கூத்தாட போகும் போது பெண்ணுக்கு ஏற்படும் தொல்லைகள் இது எல்லாத்தையும் இந்த நாவல் தெளிவா சொல்லுது.
                     
                              -எழில் ஆதித்தமிழன் 

Comments