ஒரு பெண்ணின் கதை -ஓல்கா

புத்தகத்தின் பெயர்: ஒரு பெண்ணின் கதை
ஆசிரியர் : ஓல்கா
தமிழில் -கௌரி கிருபானந்தன் 

ஒரு பெண்ணின் கதை பிரபல தெலுங்கு எழுத்தாளரான ஓல்கா எழுதிய புத்தகம் இது...

பெண்ணியம் மட்டுமல்லாம பெண்களோட பிரச்சனைகள பத்தியும், அவங்க இந்த சமூகத்துல ஒரு கட்டமைப்புக்குள்ள வாழ்றத பத்தியும், வாழ்வியல் சார்ந்து ஏற்படுற பிரச்சனைகளை பத்தியும் , எப்பவும் ஆண்கள சார்ந்து இருக்ககூடிய ஒரு சூழ்நிலைய இந்த சமூக கட்டமைப்பும் பல வருசங்களா செஞ்சிட்டு இருக்குறத ரொம்ப எளிமையா எடுத்துரைக்குது பெண்ணின் கதை புத்தகம்.

இதுல ஒரு பெண்ணின் கதை அப்படிங்கிற தலைப்போடு துவங்குற முதல் கதையில ஒரு பெண்ணோட மனக்குமுறல மிகவும் எளியை எடுத்து சொல்லி இருக்காரு ஆசிரியர். கல்யாணமான கொஞ்ச நாள்லயே தன்னோட கணவனுக்கு, அவர் வேல செய்யுற கம்பெனியில விபத்து ஏற்படுது. இந்த விபத்துல அவரோட கை விரல்கள் துண்டிக்கப்படுது. அவருக்கு  ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் மத்தியில இந்தப் பெண், அவருக்கு ஆதரவா எப்பொழுதும் நான் இருப்பேன்னு துணையாக இருந்தா. அதே நேரத்தில அவர் நிறுவனத்தில இருந்து வந்த யூனியனை சேர்ந்தவங்க அவருக்கு ஆறுதல் கூறியது, அவருடைய வேலையையும் நிறுவனத்திடம் பேசி இழப்பீடும் பெற்றுக்கொடுத்தது பெரும் மகிழ்ச்சியைத் தந்துச்சு. 

கொஞ்ச காலங்கள் அப்படியே போது, மறுபடியும்  இயல்பு நிலைக்கு வந்த அப்புறம்  ஒரு விபத்தில அந்தப் பெண் குழந்தை பெரும் திறனை இழக்குறா. அந்தச் சூழ்நிலையில கணவரும் அவரது அம்மாவும் சேர்ந்து  குழந்தை பெற முடியாதவனு கேலி செய்வதும் கணவரே தன்னை அருவருக்கத்தக்க ஆளா பார்ப்பதும் ஒரு மிகப் பெரிய மன உளைச்சலை அவளுக்கு தருது.
அவருக்கு விபத்து ஏற்பட்ட  அப்போ, தான் எவ்வளவு ஆதரவாக இருந்தோமோ அந்த அளவுக்கு இல்லனாலும், குறைந்தபட்சம் அன்பும் ஆதரவும் கூட கிடைக்காத நிர்கதியாக அவள் நிக்குறது வாசகர்களுக்கு கண்ணீர் வரவைக்கும். 

அவ மனசில, அவர் விபத்தில  பாதிக்கப்பட்ட அப்போ,  அவருக்காக துணை நிற்க  யூனியன் வந்துச்சு.  நான் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி நிர்கதியாக நிற்கிற இந்த நிலையில் எனக்காக வருவது யார்னு  அவள் நெனைக்கும் போது  நம்மோள கண்களில் கண்ணீரை வரவழைக்கிது.

பெண் எழுத்தாளர் என்றாலே பெரும்பாலும் பெண்ணியம் பத்தி எழுதியிருப்பாங்கனு  நெனைக்கிறவங்க மத்தியில் அதை உடைத்தெறியும் புத்தகமா இந்த புத்தகம் இருக்கு....

                            -எழில் ஆதித்தமிழன் 

Comments